ரிசானாவின் உயிரை காப்பாற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் அவசியம்
(Sfm) ரிசான நபீக்கின் விடுதலைக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அவரின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சமூகத்தினர் கவனம் செலுத்தியுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
ஆயினும் மன்னிப்பை வழங்கக்கூடிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் அரசாங்கம் உயர் மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவில்லை என ஆணைக்குழு தமது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருக்கான இழப்பீடு அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பெருந்தன்மை அடிப்படையிலேயே மன்னிப்பு வழங்கப்படுமென ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ரிசானா நபீக்கை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி மற்றும் இலங்கை அதிகாரிகள் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென ஆணைக்குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
Post a Comment