மதக் கூட்டங்களை நடாத்திய அமெரிக்கருக்கு ஈரானில் சிறை
ஈரானை சேர்ந்தவர் சயீத் அபெடினி. அமெரிக்காவின் இடாஹோ மாவட்டத்தில் வாழ்ந்து வந்த இவர், ஈரான் நாட்டில் உள்ள தனது நண்பர்கள் வீட்டில் ரகசியமாக கிறிஸ்தவ மதக் கூட்டங்களை நடத்தி வந்ததாக ஈரான் அரசு குற்றம் சாட்டியது.
இந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட சயீத் அபெடினி ஈரான் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது சர்வதேச மத உரிமை சட்டங்களை மீறும் செயலாகும் என அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஈரான் நாட்டின் பாதுகாப்பு சட்டங்களை மீறும் வகையில் மதப்பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக பாதிரியாருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சயீத் அபெடினியின் மனித உரிமையை ஈரான் அரசு மதிக்க வேண்டும் என அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டார்பை ஹாலடே கூறியுள்ளார்.
Post a Comment