Header Ads



உலகின் மிகப்பெரிய விமான நிலையம் துருக்கியில் அமைகிறது


உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை, இஸ்தான்புல் நகரில், 49 ஆயிரம் கோடி ரூபாய் (இந்திய மதிப்பு) அமைக்க, துருக்கி அரசு திட்டமிட்டுள்ளது. துருக்கி நாட்டின், போக்குவரத்து துறை அமைச்சர் பினாலி எல்திரிம் இதுகுறித்து கூறியதாவது,

 துருக்கி பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டின் மிக முக்கிய வியாபார பங்களிப்பு, மத்திய தரைக்கடல் நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அதிகரித்து வருகிறது.

இதை அடுத்து, உலகின் மிகப் பெரிய விமான நிலையத்தை, இஸ்தான் புல்லில் அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 49 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். இதற்காக சர்வதேச "டெண்டர்' விடும் பணிகள் நடக்கிறது. இதற்கான பணிகள், 25 ஆண்டுகளில், நான்கு கட்டங்களாக முடிக்கப்படும். முதல் கட்டப்பணிகள் அடுத்த, மூன்று அல்லது நான்காண்டுகளில் முடிக்கப்படும். முதல் கட்டப் பணிகள் முடிந்ததும், விமான நிலையத்தில், ஆண்டுதோறும், 9 கோடி பயணிகளும், விமான நிலையப் பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு, ஆண்டுக்கு, 15 கோடி பயணிகளும் வந்து செல்ல முடியும்.இவ்வாறு, அமைச்சர் பினாலி எல்திரிம் கூறினார்.




No comments

Powered by Blogger.