Header Ads



ஜனாதிபதியின் பாராளுமன்ற சர்வ கட்சிக்குழு முஸ்லிம் இயக்கங்களை தடை செய்யலாம்..!


மத அடிப்படைவாதங்கள் பற்றி ஆராய்வதற்கான ஜனாதிபதியின் பாராளுமன்ற சர்வ கட்சிக்குழு என்பது முஸ்லிம்கள் மத்தியிலுள்ள இயக்கங்களை தடைசெய்வதில்தான் கொண்டு போய் முடியுமே தவிர முஸ்லிம் மக்களுக்கெதிரான பேரினவாதத்தை அடக்கியதாக முடியாது  என முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது, 

அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக பொது பல சேனா போன்ற அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் பற்றி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேச முடியாமல் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை ஆராயவென குழுவொன்றை நியமிக்காமல் மத அடிப்படைவாதம் பற்றி ஆராய சர்வ கட்சி குழு நியமிப்பதாக தெரிவித்துள்ளமை நோய்க்கு மருந்து தராமல் நோயை மேலும் அதிகரிக்கும் செயலாகவே தெரிகிறது.

உண்மையில் இத்தகைய பிரச்சினைகளை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியால் ஒரே நாளில் தீர்க்க முடியும். ஓர் இனத்துக்கெதிராக இன்னொரு இனம் ஆர்ப்பாட்டம் செய்வதை இலங்கையின் அரசியல் சாசனம் தடை செய்கிறது. இந்த வகையில் இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு பொலிசார் அனுமதியளிக்க வேண்டாம் என அரசு உத்தரவிடுவதன் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும். 

அதனை விடுத்து பாராளுமன்ற தெரிவுக்குழு என்பது விடயத்தை இழுத்தடித்து வேறு பக்கம் திசை திருப்புவதாகவே முடியும்.  இறுதியில் பொது பல சேனாவை தடைசெய்வதாயின் தப்லீக், தவ்ஹீத் போன்ற முஸ்லிம் அமைப்புக்களையும் தடை செய்யவேண்டும் என இந்த குழு தீர்மானிக்கலாம். ஏற்கனவே பாராளுமன்ற தெரிவுக்குழு என்பது நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா விடயத்தில் நடந்து கொண்ட விதத்தை நாடே அறியும். 

பொது பல சேனா போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்ட பின் அவை வேறு பெயர்களில் இயங்க ஆரம்பிக்கும். ஆனால் முஸ்லிம் இயக்கங்களுக்கு வாழ்நாள் தடை ஏற்படும். ஆகவே இத்தகைய தெரிவுக்குழு நியமிப்பதை உலமா கட்சி மறுப்பதோடு ஜனாதிபதி அவர்கள் நேரடியாக தலையிட்டு இனங்களுக்கிடையில் இனவாதத்தை உருவாக்கும் வகையில் யார் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டாலும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் அல்லது கைது செய்யப்பட வேண்டும் என அறிவிப்பதே இதற்கான தீர்வாகும் என்பதை உலமா கட்சி தெரிவிக்கிறது என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். 

6 comments:

  1. Battle of Uhud has many similar teachings within.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் ....இவர்களே இடை ...சொல்லிக்கொடோது....இப்படி செய்ங்கப்பா என்பது போல இருக்கு ...சிலர இப்படிதான் சிந்திப்பார்கள்....அதை திருத்தவே முடியாது..அவர்களாக திருந்தும் வரை.....சில சமூக தலைவர்கள் எங்கிருந்து தான் உருவாகி வாரங்களோ தெரியது.....

    ReplyDelete
  3. Dear Ulama Kadsi Leader!!!!

    Oh...You can not use the name of Allah to survive, if they will do so??? What do you do by all those groups???

    will please keep quite???? What do you do??? Moulavies, you form groups in the name of Allah and fight among your self...That what Thowheed, Thableek, Others do even today....

    Your so called Gangs must be eradicated from muslim community and only Islam should live???

    ReplyDelete
  4. அய்யா உலக்கை கட்சி தலைவரே,
    ஏற்கெனெவே உமது புரளியால் திணறுகிறபோது, (அதுதான் முஸ்லிம்களின் பூர்வீகம் இலங்கை என்று உமது மக்கு மூளையால் சிந்தியாது எழுதியதுதான்) ஏனைய்யா முட்டாள் தனமாக அறிக்கை விடுகிறீர்?

    அன்பின் JM ஆசிரியருக்கு,
    எனது பணிவான வேண்டுகோள்... உங்களது செய்தி வலைப்பிரிவு தற்போது தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் பிரபல்யம் அடைந்து வருகிறபோது, தயவு செய்து இந்த உலக்கை கட்சி தலைவர் போன்ற அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகளுக்கு களம் அமைத்து கொடுக்காது, இதுபோன்ற குப்பைகளை பிரசுரிக்காது இருக்கும்படி மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
    நன்றி.

    ReplyDelete
  5. கண்ணா நான் நீ,
    மேலே கூறப்பட்ட கட்சியின் தகவல்கள் அவரின் ஊகப்படி உண்மையாகவே நடந்தேறலாம். அனால் அதுதான் கசப்பான உண்மையாகவும் அமையலாம். நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தெரிவும் அவ்வாறான நோக்கம் கொண்டதாகத்தான் அமையும். அதன் பிறகு நம்ம மந்திரிமார்கள் என்ன செய்வார்கள்.
    உங்களுக்கு மனசுக்கு பிடித்த இதமான சாந்தியான தகவலை மாத்திரம் பிரசுரியுங்கள் என்று சொல்ல உங்களுக்கும் எனக்கும் அருகதை இல்லை. எனவே பேச்சு சுதந்திரத்துக்கு மதிப்பளித்து அதில் உள்ள தூர நோக்கு சிந்தனைகளை, தகவல்களை நீங்க்களும் நாங்களும் உள்வாங்கி அதற்கேற்ராற் போல் தக்க நடவடிக்கை எடுக்க கண்ணியமாக ஆலோசனை வழங்குவதே உங்கள் எங்கள் தார்மீக கடமை. விதண்டா வாதம் வேண்டாம்

    ReplyDelete
  6. அன்பின் SLAHY அவர்களே,
    உங்கள் சுதந்திரம் பற்றிய கருத்துக்களுக்கு நன்றி. மேலும் எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊத்திய சங்கதியே இவர் போன்ற அரசியல் சாக்கடைகளினால் நடந்தேறும்! இலங்கை முஸ்லிம் அரசியல் மரணித்து பல வருடங்களாகி விட்டது! எனவேதான் உங்கள் போன்ற தூர நோக்கு உள்ளவர்கள் புதிய யுக்திகளுடன் முன் வர வேண்டும்.. நான் உட்பட....
    நன்றி..

    ReplyDelete

Powered by Blogger.