Header Ads



ஆசிரியர் இடமாற்றத்தில் உதுமாலெப்பை தலையீடு - முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சீற்றம்


(எஸ்.அன்சப் இலாஹி)

அக்கரைப்பற்று ஆசிரியர் இடமாற்றம் மற்றும் பிரதி அதிபர் நியமன இழுபறி  சம்மந்தமாக கிழக்கு மாகாணசபையில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின்போது அமளிதுமளி ஏற்பட்டதனால் சபை அமர்வுகள் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்;டது.

இன்று செவ்வாய்க்கிழமை (22.01.213) கிழக்கு மாகாணசபையின் சபை அமர்வு இடம்பெற்ற வேளையிலேயே மேற்படி விவாதம் இடம்பெற்றது.

அக்கரைப்பற்றை சேர்ந்த அதிபர் தரம் சித்தியடைந்த ஒருவரின் பிரதி அதிபர் நியமனம் மற்றும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரின் மனிதாபிமானமற்ற இடமாற்றம் தொடர்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எல்.எம்.நசீர் ஆகியோர் சபையில் உரையாற்றினர். இதன்போது சூடான விவாதம் இடம்பெற்றது. ஆசிரியரின் இடமாற்றமானது 29 நாட்களுக்குள் 05 இடமாற்றக்கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன இவ் விடயம் எந்த ஆசிரியருக்கும் நடந்திராத ஒர்; விடயமாகும். இது போன்று தங்களால் மேற்கொள்ப்படுகின்ற ஏனைய விடயங்களுக்கும் இவ்வாறான தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட அதிபர்,ஆசிரியர் இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் என்றமையினால் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வையின் தலையீட்டினால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மிக அநீதியான முறையில் இடமாற்றக்கடிதம் வழங்கப்பட்டுள்ளதுடன், நியமனத்திலும் இழுபறி தோன்றியுள்ளது.

இது தொடர்பாக குழு ஒன்றை உடனடியாக அமைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக சபையின் தவிசாளர் கூறியுள்ளார். பின்னர் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

3 comments:

  1. ஆசிரியர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் போது இலங்கையில் எந்த இடத்திலும் கல்வி கற்ற்பிப்பதாக சொல்லி சத்தியப்பிரமாணம் எடுக்கிறார்கள், ஆனால் இன்னும் இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. தயவு செய்து கல்வி நடவடிக்கையில் அரசியலை புகுத்த வேண்டாம்!

    ReplyDelete
  2. kaddayam idamaatanggal thevai arasiyal thalai eedu illamal irunthal sari

    ReplyDelete
  3. ஒரு மாதத்துள் ஐந்து இடமாற்றம் என்பது நியதியல்ல இது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழியரை அதிகாரம் பெற்றவர் பழிவாங்கிய செயலாகவே கருத முடிகிறது. இதற்கு நீதிமன்றம் சென்றால் கண்டிப்பாக அதிகாரம் பெற்றவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். தயவுசெய்து அதை தவிர்த்து மனசாட்சிப்படி உங்களது சேவையை தொடருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.