Header Ads



களனி பிரதேச சபையின் ஆளும்கட்சி உறுப்பினர் சுட்டுக்கொலை


களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல அவரது வீட்டின் முன்பாக வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு  தேசிய மருத்துவனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

எனினும், அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட வழியிலேயே மரணமானதாக தேசிய மருத்துமனையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.