ஹமாஸ் போராளிகளுக்கு மற்றுமொரு அங்கீகாரம் - மலேசியா பிரதமர் காசா செல்கிறார்
ஹமாஸ் அமைப்பு ஆளும் காசாவுக்கு மலேஷிய பிரதமர் நஜீப் ரஸாக் இந்த வாரம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மலேஷிய பிரதமர், வெளியுறவு அமைச்சர் உட்பட பிரமுகர்கள் குழு செவ்வாய்க்கிழமை காசா செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேஷியா நீண்டகாலமாக பலஸ்தீனத்துடன் நெருங்கிய உறவை பேணி வருவதோடு இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவை கடைபிடிக்காத நாடாகும். கடந்த நவம்பரில் காசா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த மலேஷிய பிரதமர் நஜிப், அந்த தாக்குதலை பலஸ்தீனர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்றர்.
அத்துடன் பலஸ்தீனத்திற்கு எந்தவகையான உதவியை வழங்கவும் தயார் என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் காசாவில் ஹமாஸ் அமைப்பு ஆட்சிக்கு வந்த பின் அங்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது நாட்டுத் தலைவராக நஜிப் பதிவாகவுள்ளார்.
Post a Comment