ஒபாமாவுக்கு நித்திரை கொள்ள முடியவில்லை - கண்டுபிடித்தார் அமைச்சர் விமல்
(அஸ்ரப் ஏ. சமத்)
அமேரிக்கா ஐனாதிபதி பராக் ஒபாமாவின் 3 பிரதிநிதிகள் இலங்கைக்குள் வந்துள்ளனர். அவர்கள் மார்ச மாதம் 15ம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள மணித உரிமை கூட்டத்திற்கு இலங்கைக்கு எதிராக சமர்ப்பிப்பதற்காக தகவல்கள் சேகரிக்கவே இவர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்கள் மேலும் வடக்குக்குச் சென்று பிரிவினைவாதிகளையும் அமேரிக்கா நன்கொடைநிதியம் பெறும் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து வருகின்றனர். இவர்கள் மேலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவதற்கு சாட்சிக்காரர்களைத் தேடி வந்துள்ளமையே அமேரிக்க அதிகாரிகளின் விஜயத்தின் நோக்கமாகும். என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச கொழும்பு 07ல் உள்ள சவ்சிரிபாயவில் வைத்து திம்பிரிகாசாயவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தமிழ் முஸ்லீம் சிங்கள 30 பாடசாலைகளுக்கு நூல்களும் 130 மாணவர்களுக்கான பாட நூல்களும் வழங்கிவைத்தார்.
இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் விமல் வீரவண்ச உரையாற்றினார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது,
ஏற்கனவே இவர்கள் அரங்கேற்றிய நாடகம் தோற்றுப்போனதாலேயே மீண்டும் ஒரு நாடகத்தினை அரங்கேற்றவே இந்த நாட்டில் ஐனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர், படைத்தளபதிகளையும் மற்றும் அதிகாரிகளும் யுத்த காலத்தில் அநீதி இழைத்தவர்கள் என்ற போர்வையில் சர்வதேச நீதிமன்றத்திற்கு நிறுத்துவதற்கு முயற்சித்து வருகின்றார்கள். அடுத்த மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில் மேலும் ஒரு நிகழ்ச்சி நிரலை இலங்கைக்கு எதிராக ஏற்படுத்தவே இங்கு வந்துள்ளார்கள். அவர்கள் இலங்கையின் தற்போதைய ஆட்சிக்கு எதிராகச் செயல்படுவர்களிடமிருந்து தகவல் சேகரித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் முக்கிய சாட்சிக்காரர்களாக உள்ளனர்.
அந்நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு சான்றாக பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாய்ககாவை நீக்கியமை சாட்டாகக் கொண்டு இவர்கள் மேலும் பொய்த் தகவல்களைச் சேகரிப்பதற்கே இங்கு வந்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பராக் ஒபாமாவுக்கும் அவரது அதிகாரிகளுக்கும் அங்கு நித்திரைகொள்ள முடியவில்லையாம். இலங்கை வரும் பிரதிநிதிகளிடம்; சாட்சி சொல்வதற்கு பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை இங்கு உள்ள சில எதிர்கட்சி அரசியல்வாதிகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் சில முகவர்களும் முயற்சிக்கின்றனர். சிரானி பண்டாரநாயக்க குற்றம் இழைத்தவர் அவர் பாராளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக 3-2 பங்கு பெரும்பாண்மை வாக்கு முலம் அவர் பதவி நீக்கப்பட்டார்.
சரத் பொண்சோகாவை பயண்படுத்தி சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஜ.நா மனித உரிமை தீர்மாணத்தை நிறைவேற்ற சாட்சிக்காரராகவும் பாவித்தார்கள். அவர் இலங்கைக்கு எதிராகவும் பாதுகாப்புச் செயலாளராக்கு எதிராக இலங்கை ஊடகங்களில் தெரிவித்த கருத்தே சில வெளிநாட்டு சக்திகளுக்கு சாட்சியாக அமைந்தது. மேலும் இலங்கைக்கு எதிராக வேண்டுமென்று யுத்தக் குற்ற பலி சுமத்தி ஜ.நாடுகள் மணித உரிமையிலும் நிறைவேற்றினாhகள்.இத்திட்டத்திற்கு சில வெளிநாடுகளில் உள்ள வெள்ளை புலிகளும் அந்த நாட்டில் வாழும் இலங்கைப் புலிகளும் மிகவும் பிரயத்தணம் செய்து வருகின்றனர்.
Post a Comment