வெள்ளநிவாரணப் பணிகளில் 'முஸ்லிம் எய்ட்'
(ஏ.எல்.றபாய்தீன்பாபு)
அண்மைய நாட்களில் பெய்த பெருமழை மற்றும் குளக்கட்டுகள் உடைப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தினால், பல்லாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் முஸ்லிம் எய்ட் அமைப்பு ஈடுபட்டது.
முஸ்லிம் எய்ட் தனது ஆரம்பக்கட்ட நிவாரணப் பணியாக, சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்பாடுகளை திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் முன்னெடுத்துள்ளது. மூதூரில் 475 பேருக்கு மூன்று நேர சமைத்த உணவு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏராவூர்பற்று, கோரனைப்பற்று மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய ஆகிய பிரதேசசெயலகப் பிரிவுகளளில் அடங்கும் மீராகேணி, ஐயங்கேணி, ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஏராவூர் 01, நகர்ப்புறம், கடதாசி ஆலை, மாஞ்சோலை மற்றும் செம்மண்ணோடை கிராமங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 உலர் உணவுப் பொதிகளும் 460 அன்கர் பால்மா பொதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தளம் எலுவான்குளம் 81 குடும்பங்களைச் சேர்ந்த 260 பேருக்கு சமைத்த உணவும் வழங்கப்பட்டுள்ளது. அநுராதபுரமாவட்டம் ஹொரவபொதான பிரதேசத்தைச் சேர்ந்த, யான்ஓய, மருதங்கடவெல, கியுலகட, கப்பேகம, பரங்கியவாடி ஆகிய கிராமங்களுக்கு 155 உலர்உணவுப் பொதிகள் 31ம் திகதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் எய்ட் ஊழியர்களுடன் அதன் பங்காளர் அமைப்புகளாகிய தடயம், ஹோம்ஒப் பீப்பிள், முஸ்லிம் பெண்கள் கல்வி வட்டம் ஆகிய அமைப்புகள் நன்கொடை திரட்டல் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன.
அடுத்த கட்டமாக மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் முஸ்லிம் எய்ட் ஈடுபட ஆயத்தமாகி வருகின்றது. மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இப்பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்க நன்கொடைகளைத் தந்துதவும் நல்லெண்ணம் கொண்டவர்கள் கீழ்வரும் தொலை பேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம
0112-815024
Post a Comment