நான் அந்த கொலையை செய்யவில்லை - பௌத்தன் என்பதால் கொலைகளை கண்டிகிறேன்
களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையுடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான கொலைகளின் போது சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் எனவும், இறுதியில் அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் லலித் அதுலத் முதலி கொலை செய்யப்பட்ட போது அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மீது குற்றம் சுமத்தப்பட்டதாகவும், இறுதியில் அந்தக் குற்றச்சாட்டு பொய்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்தர் என்ற வகையில் சகலவிதமான கொலைகளையும் வன்மையாகக் கண்டிப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த ஹசித மடவலவின் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாகவும் அதற்கு ஜனாதிபதி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனி பிரதேச சபை உறுப்பினரான ஹசித்த மடவலவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபரை கண்டறிவதோடு இது போன்ற செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியல் நோக்கத்திற்காக கொலை செய்யப்பட்ட ஹசித்த மடவல கொலை சம்பம் முதலும் இறுதியுமானதாக இருக்கவேண்டும். எனினும் ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களின் பாதுகாப்பில் கேள்விக்குறியே உள்ளது என்றார்.
You always says "Kalaniya is under my control". How this murder happened without your involvement
ReplyDelete