பலஸ்தீன தேசிய நிர்வாகம் ''பலஸ்தீன தேசம்'' என பெயர் மாற்றம்
பலஸ்தீன தேசிய நிர்வாகம் என்பதை பலஸ்தீன தேசம் என மாற்றுவதற்கு ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உத்தரவிட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு பலஸ்தீன தனிநாடு மற்றும் சுதந்திரத்திற்கான ஆண்டு என அப்பாஸ் குறிப்பிட்டிருந்தார். பஸ்தீனுக்கு ஐ.நா.சபை அங்கத்துவமற்ற பார்வையாளர் அந்தஸ்த்து வழங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதில் ஐ.நா.வின் அங்கத்துவம் அற்ற பார்வையாளர் அந்தஸ்தை பெற்றதன் மூலம் பஸ்தீன் ஐ.நா.வின் விவாதங்களில் பங்கேற்க அனுமதி பெறுவதோடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐ.நா.வின் அமைப்புகளில் இணைவதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.
Post a Comment