மன்னாரில் தமிழ், முஸ்லிம்களிடடையே பதற்றம் ஏற்படும் அறிகுறி - பிரான்ஸ் தூதுவர்
வடக்கில், குறிப்பாக மன்னாரில் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான பதற்றநிலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக, சிறிலங்காவுக்கான பிரெஞ்சுத் தூதுவர் கிறிஸ்ரின் றொபிகோன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களுக்கு அவர் மேற்கொண்ட பயணத்தை அடுத்து, கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, இருமாவட்டங்களினதும் மேலதிக அரசாங்க அதிபர்கள், மறைமாவட்டங்களினதும் ஆயர்கள், ஏனைய மதத்தலைவர்கள், குடியியல் சமூகப் பிரதிநிதிகள், ஐ.நா முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை பிரான்ஸ் தூதுவர் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன்போது, போரினால், இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம்களின் மீள்குடியமர்வு குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும், மன்னாரில் இனரீதியான பதற்றநிலை ஏற்படக் கூடிய சூழல் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment