Header Ads



ஆப்கானிஸ்தான் உளவு அலுவலகம் மீது தற்கொலை தாக்குதல்



ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உளவுத்துறை அலுவலக வாசலில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த கார் குண்டு வெடித்தது. இதில் அருகில் இருந்த கடைக்காரர்கள், பாதசாரிகள் பலத்த காயம் அடைந்தனர். இவர்களில் 10 பேர் இறந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக் குழுவினரும் விரைந்தனர். வெடிகுண்டு வெடித்த இடத்தின் அருகில் அரசு கட்டிடங்கள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளின் தூதரகங்கள் உள்ளன. எனவே, இதனை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சமீபத்தில் ஆப்கான் ஜனாதிபதி கர்சாய் அமெரிக்கா சென்றுவிட்டு நாடு திரும்பிய சில நாட்களில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தலிபான் தரப்பில் கூறப்படுகிறது. 

No comments

Powered by Blogger.