பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மொஹான் பீரிஸ், மற்றுமொரு ராஜபக்ஸதான்..!
இனிமேல்தான் பிரச்சினைகள் பன்மடங்காகப் பெருகி நாட்டில் பெரும் அபாயகரமான நிலை தோற்றம் பெறும். இல்லாத பிரச்சினைகள் திடீரென உருவெடுக்கும். சட்ட விரோதமான முறையிலேயே பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கப்பட்டார் என விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
அத்துடன், புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டவர் உயர்நீதிமன்ற நீதியரசர் குழாமில் அங்கம் வகிக்காதவர். இவ்வாறு இந்தக் குழாமில் அங்கம் வகிக்காதவரை பிரதம நீதியரசராக நியமித்தது பெரும் பிழையாகும்.
புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டவர் இன்னுமொரு ராஜபக்ஷதான். அமைச்சரவை ஆலோசகராகவும், பல்வேறு அரசு நிறுவனங்களின் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிப்பவருமான இவர், பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவராவார்.
எனவே, இப்படியான ஒருவரை புதிய பிரதம நீதியரசராக நியமிப்பதனூடாக நாட்டில் இல்லாத பிரச்சினைகளெல்லாம் இனி தோன்றும். அத்துடன், நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை இல்லாமல்போகும். நீதித்துறை மீது அவர்களுக்கு பெரும் சந்தேகங்கள் ஏற்படும்.
மேலும் நாட்டில் ஜனநாயகம், நீதித்துறை வீழ்ச்சிக்கே இது வழிவகுக்கும் என்றார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத்.
unmaiudanum,payathudanum...............
ReplyDeleteNanry,
IPPADIKKU.
srilankan people