Header Ads



கிழக்கு மாகாண மு.கா. உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணை தொடருகிறது - ஹசன் அலி


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாநாயக்காவுக்கு எதிரான குற்றவியல் பிரேணை குறித்து முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லையென தெரிவித்த அக்கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பி.யுமான ஹசன் அலி, கிழக்கு மாகாண சபையில் திவிநெகுமே சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை தொடருவதாகவும் குறிப்பிட்டார்.

இதுகுறித்து எமது இணையத்திற்கு கருத்து தெரிவித்த ஹசன் அலி மேலும் குறிப்பிடுகையில்,

திவிநெகுமே சட்ட கிழக்கு மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆதரவாக வாக்களித்தமை பற்றிய விசாரணை தொடருகிறது. ஒழுக்காற்று விசாரணையும் இன்னும் நிறைவு பெறவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் நான்தான். ஒரு கட்சிக்கு ஒரு செயலாளர்தான் உண்டு. பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் அல்ல.

எந்த அடிப்படையில் ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடைபெற்வில்லையென்றும், அவ்விடயம் முற்றுப்பெற்றுவிட்டது என்றும் கூறினார் என்பது எனக்கு தெரியாது.

பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் திவிநெகுமேக்கு ஆதரவாக வாக்களித்தமை முஸ்லிம் காங்கிரஸின் ஒட்டுமொத்த தீர்மானம். ஆனால் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை. கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் திவிநெகுமேக்கு ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.

இருந்தபோதும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் என்றவகையில் நான் கூறுகிறேன். கிழக்கு மாகாண சபையில் திவிநெகுமே சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிரான விசாரணை தொடருகிறது. நான்தான் அதற்குரிய கடிதங்களை கட்சித் தலைவரின் அனுமதியுடன் அனுப்பிவைத்தேன். அவர்களிடம் விளக்கமும் கோரப்பட்டுள்ளது என்றார்.

8 comments:

  1. ஹி...ஹி.... பிரதமநீதியமைச்சருக்கு எதிரான குற்றவியல் பிரேரனைக்கு நீங்க என்ன செஞ்சி கிழிக்கப்போறிங்க ?? அரசாங்கத்துக்கு ஜால்றா அடிப்பீங்க...இதக்குழந்தப்பிள்ளக்கிட்ட கேட்டாலும் சொல்லுமே...இதுக்கு நீங்க உயர்மட்டத்தக்கூட்டுவிங்க... ஆதரவாளர்கள கூட்டுவிங்க..போதும் உங்கட நாடகம் எல்லாம்....

    ReplyDelete
  2. நீதியரசர் விடயத்தில், நீங்கள் வாக்களிக்காவிட்டாலும் அரசு அமோக வெற்றி பெறும். ஆகவே நீங்கள் வாக்களிப்பில் முன்டியடித்துக்கொள்ளுங்கள். அதுதான் காங்கிரசுக்கு மரியாதை. உங்கள் தீர்மானமே அரசுக்கு ஆதரவாக 100% வாக்களிப்பதுதான்.

    கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு விசாரணை என்குறீர்கள், ஆனால் என்ன பணியாரத்துக்கு நீங்கள் பாரளுமன்றில் அதற்கு ஆதரவாக வாக்களித்தீர்கள்? நீங்க என்ன பேசுகின்றீர்கள் என்று உங்களுக்கே தெளிவா? இல்ல என்று நினைக்குறோம். சுடுதண்ணியில் முக்கி குளித்துவிட்டு பேசும் ஹசன் சார்..... உங்களை பார்க்கவே அசிங்கமா இருக்கு.... உங்கள் பேச்சுக்கு கட்சிக்குள்ளேயே மதிப்பில்லை என்பதை தெள்ளத்தெளிவாக நீங்களே அம்பலப்படுத்துகின்ரீர்கள்.

    ReplyDelete
  3. Summa nadikateenga visaranai nadathi finally enna action adukka mudium??
    Katchi rules and regulation meeriyatatku katchiyil irunthu weliyetra mudiuma??

    ReplyDelete
  4. நல்ல காலம் வடிவேலு நம்ம நாட்டில் இல்லை. இருந்திருன்தால் ஹசன் அலியை பார்த்து லூசு பய புள்ள என்று சொல்லி இருப்பாரோ ?

    ReplyDelete
  5. 2013 இல் முதன் முதல் நடைபெற்ற மிகப் பெரும் ஜோக். வடிவேல், விவேக், கௌண்டமணி செந்தில், சந்தானம் எல்லாருமே தோல்வி.
    அது சரி நீங்க வாக்களிச்சதுக்கு யார் விசாரணை பண்ணுவாங்க? ஒத்தரும் இல்லையெனும் தைரியமா? நாளை மறுமையில் அல்லா இருக்றான். அதற்கு முதல் தேர்தலில் வாக்களிக்க மக்கள் இருக்கிறார்கள்.
    நீதியரசர் விசயத்தில் என்ன அன்னுவீங்க அரசுக்கு ஆத்தரவா வாக்களிப்பீங்க. அதற்கு முன் உன்ங்கள் அந்த பெரிய்ய்ய்ய்ய உயர் சபை கூடனும், ஆராயணும் என்று மக்களை மடையன் ஆக்குவீங்க.

    ReplyDelete
  6. Haiyo Haiyo Ketkave Kevalamaaha Irukkintrathu. ivankada naadaham ellam sinna pillai kooda Kevalamaaha kathaikkintra alavitku poi vittathu.

    ReplyDelete
  7. BEST COMEDIAN IN PARLIAMENT…… UP TO 2013………….

    THE AWARDS GOES TO ……………………

    ஹசன் அலி


    சார்லி சப்ளினுக்கும் ஹசன் அலிக்கும் என்ன வித்தியாசம்?

    சார்லி சப்ளினுக்கு - மீசை உண்டு.

    ஹசன் அலிக்கு - மீசை இல்லை.

    ReplyDelete
  8. சார்ளி சப்லின் - சிரிப்பாட்டுவர்
    ஹசன் அலி - கடுப்பேத்துவார்..

    ReplyDelete

Powered by Blogger.