Header Ads



முஹம்மது முர்ஸி தலைமையில் ஹமாஸ் - பதாஹ் பேச்சுவார்த்தை



பாலஸ்தீனத்தின் இரு குழுக்களை சமாதானம் செய்வதற்கான முயற்சியில் எகிப்து அதிபர் முகமது மோர்ஸி ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் காலெத் மெஷால் ஆகியோரை மோர்ஸி தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

புதன்கிழமை நடைபெற்ற அப்பாஸýடனான சந்திப்பின்போது, எகிப்து வெளியுறவு அமைச்சர் முகமது கமல் அமர், மோர்ஸியின் உதவியாளர் ஈஸம் எல்-ஹதாட், பாலஸ்தீன செயல் அலுவலக உறுப்பினர் சயீப் எரகத், ஃபதா கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அஸாம் அல்-அஹமது மற்றும் அப்பாஸ் செய்தித் தொடர்பாளர் நபில் அபு-ருதினா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, காஸா பகுதி பிரச்னையில் சமரச தீர்வு காண்பது குறித்தும், காஸா பகுதியில் உள்ளவர்களுக்கு எல்லை வழியாக மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிப்பது குறித்தும் பேசி முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த மேற்குக் கரையை ஆளும் ஃபதா கட்சித் தலைவர் அப்பாஸ் மற்றும் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் மெஷால் ஆகிய இருவரும் முதன்முறையாக தனியாக சந்தித்துப் பேசினர். 

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த இவ்விரு பிரிவினருக்கும் இடையே, காஸா பகுதியை ஹமாஸ் இயக்கத்தினர் கைப்பற்றியது தொடர்பாக கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இரு பிரிவினரும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

எகிப்தில் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட உள்நாட்டு பிரச்னை இருந்த போதிலும், அதிபர் மோர்ஸி, பக்கத்து நாடுகளின் பிரச்னைக்குத் தீர்வு காண்பதிலும், வெளியுறவு விவகாரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

No comments

Powered by Blogger.