நிந்தவூர் வைத்தியசாலையில் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள்
(சுலைமான் றாபி)
நிந்தவூர் வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சனிக்கிழமை தோறும் காலை 08 மணிதொடக்கம் பி. ப. 4.00 மணி வரை தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் (Non Communicable Disease - NCD) சிகிச்சை இடம்பெற உள்ளது. இதில் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலாரிற்கும் ஏற்படும் நீரிழிவு (Diabetic), குருதி அமுக்கம் (Pressure), உடல் கொழுப்பு (Cholesterol) மற்றும் இதர நோய்களுக்கான சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் (PHI) KL மன்சூர் தெரிவித்தார்.
மேலும் இந்த இலவச சிகிச்சையை பெற விரும்புகின்றவர்கள் வெள்ளி இரவு 08 மணிக்கு இரவுச் சாப்பாட்டினை நிறைவு செய்து விட்டு மறுநாள் காலை எவ்வித உணவோ, நீரோ அருந்தாமல் நிந்தவூர் வைத்தியசாலையிலோ அல்லது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலோ வருகை தந்து சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்
Post a Comment