அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கவனத்திற்கு..!
(எஸ்.எம்.அறூஸ்)
அட்டாளைச்சேனை புறத்தோட்டம் 9ம் பிரிவில் மாட்டுக் காளைகள் கட்டப்பட்டிருப்பதால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
தற்போது மாரி காலம் என்பதால் மாட்டுச் சானத்தின் நாற்றம் மிக மோசமாக உள்ளது. மக்கள் வீடுகளில் இருக்க முடியாத அளவிற்கு தூர் நாற்றம் வீசுகின்றது. இரவு வேளைகளில் மாடுகள் குடியிருப்பு வேளிகளை உடைத்து சேதப்படுத்துவதுடன் பயிர்களையும் நாசப்படுத்துகின்றது.
இது விடயத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தடவைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பதவி பெறுவதற்காக மக்கள் காலடிக்கு வரும் அரசியல் வாதிகள் அந்த மக்களின் பிரச்சினை என்று வருகின்றபோது ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.
பேசாம இதுக்குள்ள புதையல் உண்டு எண்டு சொல்லி இருக்கலாம்.
ReplyDeleteஇந்நேரம் ...
பிரதேச சபை என்ன ,
சுகாதார வைத்திய அதிகாரி என்ன?
மாகாண சபை உறுப்பினரும், மாகாண அமைச்சரும் அள்ளிக்கு போய் இருப்பாங்க.
சர்வதேச அழுத்தத்திற்கும் இப்படி ஒரு POWER இருக்காது AHAMED.
ReplyDelete