சிரியா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்
சிரியா நாட்டில் இஸ்ரேஸ் போர் விமானங்கள் திடீரென புகுந்து சரமாரியாக குண்டு வீசின. லெபனான் எல்லையில் உள்ள ஜாம்ரயா என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடந்தது. ஹிஸ்புல்லாகளிடம் சிரியாவின் ஆயுதங்கள் சிக்கும் என்று இஸ்ரேஸ் கருதுகிறது. எனவே அந்த ஆயுதங்கள் சிக்கிவிடாமல் தடுக்கவே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இஸ்ரேல் விமானங்கள் அடிக்கடி லெபனானுக்குள் புகுந்து தாக்குவது உண்டு. இப்போது திடீரென சிரியா நாட்டுக்குள் தாக்குதல் நடத்தியிருப்பது அங்கு பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. |
Post a Comment