Header Ads



ஹஜ் செல்பவர்களுக்கு இனி ஒருமுறை மட்டுமே அரச உதவி - இந்தியா அறிவிப்பு

இஸ்லாமியர்களின் புனிய தலங்களாக கருதப்படும் மக்கா, மதீனா நகரங்களுக்கு உலக நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் ஆண்டு தோறும் ‘ஹஜ்’ புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வகையில், இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன.

ஏற்கெனவே ஒருமுறை ஹஜ் யாத்திரை சென்றவர்கள் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மறுமுறையும் அரசின் மானிய உதவியுடன் ஹஜ் பயணம் செல்ல முன்னர் அனுமதிக்கப் பட்டிருந்தது.

இந்த நடைமுறையினால் முதன் முதலாக ஹஜ் பயணம் செல்ல விரும்பும் மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் இருந்தது. இதனை கருத்தில் கொண்ட இந்திய ஹஜ் கமிட்டி புதிய நடைமுறையை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இது தொடர்பாக, முசாபர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஷாகிர் ஹுசைன் கூறியதாவது:-

இரண்டாவது முறையாக ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு இனி அரசின் மானிய உதவி கிடைக்காது. இதுவரை ஹஜ் யாத்திரை செல்லாத இஸ்லாமியர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசின் மானியத்துடன் ஹஜ் செய்ய விரும்புவோர், ‘நான் முதன் முறையாக இப்போது தான் ஹஜ் யாத்திரை செல்லப் போகிறேன்’ என்று உறுதிமொழி பத்திரத்தை மானியம் கோருவதற்கான விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

தவறான தகவல்களை அளித்து அரசின் மானியத்தை பெற முயல்பவர்களின் அரசின் மானியத்தை பெற முயல்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.