Header Ads



பௌத்த விகாரைகளில் நேற்று முஸ்லிம்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்


(TL) போயா தினமான நேற்று சனிக்கிழமை பெரும்பாலான விகாரைகளில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டும் விதத்தில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். 

போயா தினத்தையொட்டி விகாரைகளில் நேற்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில், பல இடங்களிலுமுள்ள விகாரைகளில் பூஜையில் பங்குபற்றியவர்களுக்கு  இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

ஹலால் உணவுப் பொருட்களை வாங்க வேண்டாமெனவும், முஸ்லிம் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டாமென்பதுடன் முஸ்லிம்களுக்கு காணிகள், வீடுகளை விற்கக் கூடாதெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் இத்துண்டுப் பிரசுரத்தை எந்த அமைப்பு வெளியிட்டதென குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

3 comments:

  1. Hi Friends,

    யானைகள் சேற்றில் புதைந்துவிட்டால் தவளைகள் கூட எட்டி உதைத்துப் பார்க்குமாம்.

    இறுக்கமானதென்று இன்றளவும் கருதிக்கொண்டு குறட்டைவிடும் நம்மவர்களின் கோட்டையின் விரிசல்களுக்குள்ளே இனவாதச் செடிகள் முளைத்து வருவதை பார்த்தீர்களா நண்பர்களே.

    சற்று யோசித்துப் பாருங்கள் நாம் நமது பழம் பெருமையிலும் வெற்றுக் கோஷங்களிலும் காண்பிக்கும் அக்கறையை இன்றைய உலகின் சவால்களுக்கு முகம் கொடுப்பதிலே காண்பித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?.

    அடிப்படையில் பிற சமூகத்தவர்களை ஏளனமாக நினைப்பதற்கும் வெறுப்பை உமிழ்வதற்கும்தானே நாம் நமது மார்க்கத்தை (மறைமுகமாக) பயன்படுத்தி வந்திருக்கின்றோம். ஒருநாட்டில் சிறுபான்மையாக இருந்துகொண்டே அதீத உயர்வு மனப்பான்மையோடு மற்றவர்களை தாழ்மையாகக் கருதினோம். நமது மார்க்கம் மட்டுமே சிறந்தது என்றும் நம்மைத் தவிர மற்றவர்களெல்லாம் சாபத்துக்குரியவர்களென்றும் கூறிக்கூறியே அவர்களின் வெறுப்பைச் சம்பாதித்து விட்டோம்.

    இப்போது அவர்களெல்லாம் ஒன்றுகூடி விட்டார்கள்.

    நாம் அவர்கள் மீது வேண்டிய விமர்சனங்களை வைத்து வருகின்றோம். ஆனால் பதிலுக்கு அவர்களிலிருந்து யாராவது ஒருவர் ஏதாவது விமர்சனத்தை வைத்துவிட்டால் போதும். அதை ஜனநாயக வழியில் கண்டிப்பதையோ எதிர்த்துக் குரல் எழுப்புவதையோ விடுத்து சட்டென வன்முறைகளிலே இறங்கத்தலைப்படுகின்றோம்.

    நம்மவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக உலகிலுள்ள பயங்கரவாதச் செயல்களை கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கின்றோம். ஆனால் இலக்கியங்களிலே அல்லது திரைப்படங்களிலே அதைச் சித்திரித்தால் என்ன சொல்ல வருகின்றார்கள் என்று தெரிந்து கொள்ளாமலே குழப்பம் விளைவிக்கின்றோம்.

    இதனால் நம்மவர்களிலே பெரும்பான்மையோரை மூளையைவிட நமது பாரம்பரிய மரபணுக்களே வழிநடாத்துகின்றன என்ற ஒரு கேவலமான கருத்து சர்வதேச உலகிலே ஏற்பட்டிருக்கின்றது. இதை நாம் முனைந்து மாற்றிக்கொள்ளப்போகின்றோமா அல்லது (வழக்கம்போல) இப்படியெல்லாம் சிந்திக்கச் சொல்பவர்களையெல்லாம் நமது விரோதிகள் என்று முத்திரை குத்திக்கொண்டு அடுத்துவருகின்ற தலைமுறைகளையும் இப்படியே இருந்துவிட அனுமதிக்கப்போகின்றோமா?

    சிந்தியுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. You r right.while the other communities sneaking into our wrong doings, we r trying to be satisfied
      by making only statements over the highlights of our doings.as well protesting against a film never neccessary in this tense situation besides more than thousands of hollywood movies show muslims as terrorists like which of tamil movies are very few.where were these protestors while the screen such hollywood movies in theatres worldwide? so all our reactions are being expressed after we gave them a way to critisize us with our behaviours.its very sad to think THATS WHAT WE ARE GOOD AT.

      Delete
  2. Perfect Jesslya!
    Hats off!!!

    ReplyDelete

Powered by Blogger.