இந்தியாவில் விடுதலை புலிகளின் தடை நியாயமானதே..!
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சு விதித்த தடை நீடிப்பு சரியானது என்று நீதிபதி எம்.கே. ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலையை அடுத்து 1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது.
இறுதியாக, கடந்த ஆண்டு மே 14ம் நாள், விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சு நீடித்தது.
இந்தத் தடை நீடிப்பு சரியானதா என்பது குறித்து நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.
இந்தத் தீர்ப்பாயத்தின் விசாரணைகள் சென்னை, ஊட்டி, புதுடெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்றன. மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்புக்கு எதிராக இந்தத் தீர்ப்பாயத்தில் வாதிட்டனர்.
இதையடுத்து, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்து மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு சரியானதே என்று நீதிபதி எம்.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்த அறிவிப்பு தமிழக அரசின் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment