Header Ads



போர்க் கப்பல்களை தாக்கும் அதி நவீன ஏவுகணை - ஈரான் வெற்றிகரமாக சோதனை நடத்தியது



போர்க் கப்பல்களைத் தாக்கும் அதி நவீன ஏவுகணையை  ஈரான் வெற்றிகரமாக சோதனை நடத்தியது. இது குறித்து ஈரான் அரசு தொலைக்காட்சி செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்தி,

ஈரானின் கப்பற்படைப் பயிற்சி கடந்த ஐந்து நாள்களாக நடைபெற்றது. இதில் பல்வேறு ஆயுதங்களின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது. இதன் கடைசி நாளில் 200 கிலோமீட்டர் இலக்கைத் தாக்கும் "கேதர்' என்ற அதி நவீன ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது. கப்பற்படையின் இந்தப் பரிசோதனை முயற்சி, வெற்றியில் முடிந்தது என அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அணு ஆயதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டுவதை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் தங்களது ராணுவ வலிமையைக் காட்டவே ஈரான் இந்த ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டது என்று கூறப்படுகிறது.

2 comments:

Powered by Blogger.