Header Ads



கத்தார் வாழ் இலங்கை பிரதேசவாரியான அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான விசேட ஒன்று கூடல்



Community Welfare Forum (SLIC) ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் கத்தார் வாழ் சமூக ஆர்வளர்கள், சமூகத் தொண்டர்கள், ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றவர்களுக்கான விசேட ஒன்றுகூடல் அல்லாஹ்வின் அருளால் 10. 1. 2013 வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு SLIC இன் கேட்போகூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊர்வாரியான அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூகத் தொண்டர்கள், ஏனைய அமைப்புக்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தமது காத்திரமான கருத்துக்களை தெரிவித்தார்கள்

இலங்கையின் கத்தார்வாழ் சகோதார்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள், தேவைகள், வழிகாட்டல்கள் பற்றிக் கலந்துரையாடியதோடு அதன் முக்கியத்துவமும், தீர்வுகளம் ஆராயப்பட்டு, எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய ஒரு திட்டமிடல் செயலமர்வும் இடம்வொற்றது.

கடந்த பத்து வருடகாலமாக இலங்கை சமூகத்துக்கு மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்தவைப்பதிலும், தனி மனித - சமூக நலத்திட்டங்களை நேர்த்தியாக முன்னெடுப்பதிலும், சிறார்களின் கல்வி வளர்ச்சியல் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதிலும், மேலும் பெண்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடாத்துவதிலும் இலங்கை இஸ்லாமிய நிலையம் (SLIC) வெற்றிகரமாக செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

மேதிக தொடர்புகளுக்கு 44418258  / 55892560 / 66270573




1 comment:

Powered by Blogger.