Header Ads



மன்னர் அப்துல்லாவுக்கு ஆலோசனை வழங்க பெண்கள் தேவையில்லை - எதிர்ப்பு வலுக்கிறது


(Tn)

சவூதி மன்னருக்கு ஆலோசனை வழங்கும் சூரா கவுன்சிலுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிராக ஒரு சில மதத் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சவூதி தலைநகர் ரியாதில் இருக்கும் அரச நீதிமன்றத்திற்கு முன் நேற்று முன்தினம் சுமார் 50 மதத் தலைவர்கள் மன்னரின் முடிவுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டதோடு மன்னர் அப்துல்லா அல்லது அவரது உதவியாளர் காலித் அல் துவைஜ்ரியை சந்திக்க கோரிக்கை விடுத்தனர் “அரச நீதிமன்றத்திற்கு முன் கூடிய இந்த மதத் தலைவர்கள் பெண்கள் நியமனம் குறித்து விளக்கம் கோரி மன்னர் அல்லது அவரது உதவியாளரை சந்திக்க கோரிக்கை விடுத்தனர். இதற்கு இரண்டு மணிநேரம் காத்திருந்த போதும் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது” என சவூதி அரசியல் செயற்பாட்டாளர் வலீத் அபு அல்கைர் ராய்ட்டருக்கு தொலைபேசியூடே தெரிவித்தார்.

ஆண்கள் மாத்திரம் ஆதிக்கம் செலுத்திய 150 பேர் கொண்ட சூரா கவுன்ஸிலுக்கு மன்னர் அப்துல்லா கடந்த வெள்ளிக்கிழமை 30 பெண் உறுப்பினர்களை நியமித்தார். இதற்கு மன்னரின் பிரதான மதத் தலைவர்களும் அனுமதி அளித்தனர். சூரா கவுன்ஸில் நாட்டின் கொள்கை மற்றும் சட்டங்கள் தொடர்பில் மன்னருக்கு ஆலோசனை வழங்கும் குழுவாகும்.

சலபி கடும்போக்கு கொள்கை கொண்ட சவூதியில் மதத்தலைவர்களுக்கு சமூகத்தில் வரையறுக்கப்படாத அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் நீதித்துறையில் முழு ஆதிக்கம் செலுத்துவதோடு மத நடவடிக்கைகளை நிலைநிறுத்த தமக்கான தனி பொலிஸ் அதிகாரத்தை வைத்துள்ளனர்.

இந்நிலையில் மன்னருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தடைவிதிக்கும் தீர்ப்பை மதத்தலைவர்கள் வழங்கியுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.