Header Ads



கொழும்பில் சிறந்த கல்விச் சமூகம் உருவாக வேண்டும் - அமைச்சர் பௌஸி



(அஷ்ரப்  ஏ சமத்)

கொழும்பு ஹமீட் அல் ஹூசைனியா தேசிய பாடசாலையில்  பற்சிகிச்சை நிலையமொன்றையும், முதலாம் ஆண்டு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நிகழ்வு கல்லூரி அதிபர் எம். ஜே மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி கலந்து கொண்டார்.  பற்சிகிச்சை நிலையத்தினை நிர்மாணப்பணிக்கு மேல்மாகாண சபை உறுப்பினர் நவ்சர் பௌசி அவர்களின் நிதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் பவுசி இங்கு உரையாற்றுகையில்,,

இந்தப் பாடசாலைக்குள் எவ்வித அரசியல் வேறுபாடுகளுமின்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தப் பாடசாலையில் உள்ள 3500 முஸ்லீம் மாணவர்களது கல்வித்தரத்தை முன்னேற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். கொழும்பு மாவட்டத்தில் முஸ்லீம் ஆணகளுக்கென  உள்ள ஒரே ஒரு அரச தேசிய பாடசாலை ஹமீட் அல் ஹூசைனியா மட்டுமே உள்ளது. இப் பாடசாலையில் கற்கும் மாணவர்கள் தமது கல்வித்தரத்தை உயர்த்தி இப் பிரதேசத்தில் ஒரு சிறந்த கல்விச் சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். என அமைச்சர்  பௌசி அங்கு கூடியிருந்த பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.  





1 comment:

  1. இவர் ஜாதி, மத பேதம் இன்றி சேவை செய்யக்கூடிய ஒரு நல்ல சேவையாளன் இவர் கூட நம் சமூகத்திற்கு பிரச்சின வரும்போது மௌனித்து விட்டாரே!

    ReplyDelete

Powered by Blogger.