மனித கொடூரனை காட்டிக்கொடுத்த மாணவி உயிருடன் எரிப்பு - இந்தியாவில் அசிங்கம்
இந்தியா அலகாபாத் அருகே கற்பழித்தவனை காட்டி கொடுத்த 16 வயது மாணவியை, கற்பழித்த அந்த கொடூரன் மற்றும் அவனது உறவினர்கள் சேர்த்து உயிருடன் எரித்த பயங்கரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்திலுள்ள சங்ககார்க் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த பெண்ணின் பெற்றோர்கள் இருவரும் வியாபாரிகள் என்பதால் வீட்டில் இல்லை. அப்போது, பக்கத்தில் வீட்டிலிருந்த காமக்கொடூரன் ஒருவன் அந்த மாணவியை கற்பழித்துள்ளான். பெற்றோர்கள் வீடு திரும்பியதும் மாணவி தமக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் நியாயம் கேட்க சென்றுள்ளனர். அப்போது அந்த காமக்கொடூரனின் உறவினர்களுக்கும் கற்பழி்க்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரமடைந்த காமக்கொடூரனின் உறவினர்கள் அந்த பெண்ணை உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரை போலீசார் வாங்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுது்து பெண் உரிமை சங்கத்தினர் இந்த சம்பவத்தை ஊடகங்களுக்கு கொண்டு சென்றதை அடுத்து பிரச்னை வெளியில் தெரிந்துள்ளது.
டில்லியில் ஓடும் பஸ்சில் பெண் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கி வரும் நிலையில் இது போன்ற விரும்பதகாத சம்பவங்கள் தொடர்வது கவலை அளிப்பதாகவும், பெண்களின் பாதுகாப்பின்மையில் உள்ள குறைபாட்டை வெட்ட வெளிச்சமாக்குவதாகவும் பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே இது போன்ற குற்றங்கள் குறையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
1. பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதித்தல்
ReplyDelete2. கற்பழித்தவனுக்கு பப்ளிக்கா 100 கசையடி, மற்றும் 1 வருடம் நடுகத்தும் சட்டத்தை அமுல்படுத்துங்கள். அப்புறம் பாருங்கள், இந்த அணியயக்கரர்கள் எப்படி திருந்துவார்கள் என்று.......
அதே வேலை திருமணமானவன் அதே வேலையை செய்தால் மரண தண்டனை அமுல் படுத்துங்கள்.
ReplyDeleteYes! Islamic Law is the Solution for all problemss!! If a country implements this law of punishment rape will increase or decrease or remain same???
ReplyDelete