Header Ads



மதீனா மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் தூணில் நாக்கை தொங்கவிட்டபடி உருவமா..? (படங்கள்)


(Moulavi A. Mohamed Khan Baqavi)

இத்துடன் மஸ்ஜிதுன் னபவீயில் உள்ள தூணின் புகைப்படங்கள் உள்ளன. அவற்றில் ஒரு உருவம் (அதாவது நாக்கைத் தொங்கவிட்டுள்ள ஒரு ஷைத்தான் படம் - இந்துக்கள் திருஷ்டிக்காக தொங்கவிடும் படம் போன்றது) தென்படுகிறது.

இது தொடர்பாக மலேஷிய நண்பர் ஒருவர் சஊதியின் ராபித்தா அல்ஆலமில் இஸ்லாமிக்குத் தகவல் தெரிவிக்க அவர்கள் அந்தத் தகவலை ஹஜ் அமைச்சகத்திற்குத் ஃபார்வேர்டு செய்துள்ளார்கள். 

இது குறித்து முஸ்லிம் சமூகம் விழிப்படைய வேண்டும். உருவ வழிபாட்டை எதிர்த்து ஆயுள் முழுக்கக் களமாடிய அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கத் தலத்திற்கு அருகிலேயே அதுவும் அவர்களின் பள்ளிவாசலிலேயே உருவமா?




7 comments:

  1. முக உருவ அமைப்பில் துண்டாடிய நாக்கு மாத்திரமல்ல அதன் கண்களிரண்டுக்கும் நடுவேயுள்ள மூக்குப் பகுதியை கூர்ந்து கவனியுங்கள் சிலுவை ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கே இந்தக் குருட்டு மத ஞானிகள் ? அவர்கள் எங்கே தொலைந்தார்கள்? ரிஸானாவின் கழுத்து நன்றாகத் தெரிந்தவர்களுக்கு யஹூதி நசாராக்களின் நபிகளாரை அவமதிக்கும் சூட்சும உத்திகள் தென்படவில்லையென்பது ஆச்சரியமானது.

    ReplyDelete
  2. நன்றே செய்தீர் நலமே செய்தீர்... அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக!

    ReplyDelete
  3. அப்படி பெரிதாக தெரியவில்ல.......சரி....இப்படி ஒரு நண்பர் கவலையுடன் கூறினார்... """கொழும்போ BORELLA இலுள்ள ஜும் ஆ மஸ்ஜித் , ( CHILDREN HOSPITAL ) அருகே உள்ள பள்ளி,.. இங்கு தரைக்கு மாபிள் பதித்துள்ளனர்...... ஒவ்வொரு சதுரத்திலும் ஒரு தலை , அப்பட்டமாக மூக்கு மற்றும் தலை , தனி தலை உருவம் உள்ளது.... அங்கு எல்லோரும் அதை பாத்து த்தான் தொழுகிறார்கள்..... அங்குள்ள தப்லீக் கூட்ட மக்களுக்கும் இது தெரியும்.......ஆனால் கணக்கே இல்லை , தொழுகிறார்கள்."".... இப்படி கவலையுடன் கூறினார்... .... கொழும்பில் யாரு ம் இருந்தால் போய் பாருங்கள்.....போடோ எடுத்து இங்கு அனுப்புங்கள்.......ப்ளீஸ்

    ReplyDelete
  4. மண்ணின் மைந்தரே பொரளை ஜும்மா மஸ்ஜிதில் ஐந்து நேரமும் தொழுபவர்கள் தரை ஓடுகளுக்கு மேலால் போடபட்டுள்ள டிசையின் அற்ற காபட்களிலேயே நின்று தொழுகின்றனர் தரையோடு பற்றி தெறிந்தவர்கள் வழமையான தொழுகையாளி அல்லாமல் காபட்கள் அற்ற தரை ஓட்டில் தொழும் ஜும்ஃஆ தின தொழுகைக்காக அங்கே விஜயம் செய்பவராக இருக்க வேண்டும் ஆக அப்படி தெறிந்தால் அதனை அவர் மிக அக்கரையுடன் அதன் நிர்வாகதிட்கு தெறிவித்திருக்க வேண்டுமே ஒழிய உங்களிடம் வந்து புலம்பி அது இங்கு பதியபட்டிருக்க கூடாது!!!

    ReplyDelete
  5. இதில் ஆச்சரியப் படுவதற்கு என்ன இருக்கிறது?.உலக முஸ்லிம்களின் புனிதஸ்தலங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸை சியோனிஸ யூதர்களுக்கு தாரைவார்த்து விட்டோம் என்பதை ஒப்புக்கொண்டு ''இரு புனிதஸ்தலங்களின் காவலர்'' என்று தங்களை தாங்களே கூறிக்கொண்டு ஷரிஆ பூச்சாண்டி மூலம் உலக முஸ்லிம்களை வஞ்சிக்கும் மன்னர்களுக்கும், உத்தம இறைதூதர் போதித்த தூய இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? அரேபியா எப்படி சஊதின் அரேபியாவானது?சாந்தி மார்க்கமான தூய இஸ்லாத்தின் மூலமந்திரமான திருக்கலிமாவின் கீழ் போர்வாளை புகுத்தியவர்கள் யார்? ''புனித'' நகரான மக்கா,மதீனாவை வர்த்தக உல்லாச நகராக மாற்றுவதில் வெற்றி கண்டிருப்பவர்கள் யார்? இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிநிலைக்கு அத்திவாரம் போட்டவர்கள் யார்?இஸ்லாமிய உம்மத்தை பிளவு படுத்த புதிது புதிதாக தனிப் பள்ளிவாயல்களை அமைப்பதற்கும்,முஸ்லிம்களின் தொல்பொருள் அடையாளங்களை ''ஷிர்க்''என்ற பெயரில் அழிப்பதற்கும் அவர்கள் அள்ளித் தந்த ரியால்களின் சூழ்ச்சி இன்னுமா புரியவில்லை? இந்த மன்னர்கள் இனவாத வெறியர்களான தேரர்களை காட்டிலும் பன்மடங்கு கொடியவர்கள் என்பதை புரிந்துகொள்வது எப்போது? பொது பலசேனா இன்று குறுங்குளுவாத சிந்தனையில் மூழ்கியுள்ள முஸ்லிம்கள் மத்தியில் ஐக்கியத்தின் தேவையை உணர்த்தியுள்ளது.

    ReplyDelete
  6. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் , இடற்கு முன் நீங்கள் இந்துக்கள் திச்டிகாக வைதுள்ள உருவங்களை கண்டிருப்பதால் அது உங்கள் கண்ணனுக்கு அப்படி தெரிகிறது , ஆனால் அரபிகள் , இப்படியான சிலைகளை கண்டுஇல்லதால் அவர்களின் கண்ணுக்கு அது அப்படி தெரிவதில்லை. மேலும் ரிசானாவின் தண்டனையை நினைவு படுத்தி எதை எதற்கு முடிச்சி போடுகிறீர்கள் ,முதலில் பிறரை குறை கூருவதை விட்டு விட்டு , இப்படியான எண்ணங்களை தூண்டும் ஷைதனிடம் இருந்து பதுகாப்பு தேடுங்கள்

    ReplyDelete
  7. சில உருவங்கள் நமது கற்பனையால் தானாகவே தோன்றும்.அதனை வைத்து நாம் யாரையும் குறை கூற முடியாது.ஒரு வடிவத்தை நாம் எப்படியும் கற்பனையால் நமக்கு தோன்றச்செய்ய முடியும்.இது கலைஞ்சர்களுக்கு பரீட்சியமான விடயம்.சவுதியைப்பொறுத்தவரை சிர்க் விடயத்தில் மிகக்தடுமையான எதிர்ப்புள்ள நாடு.அதுவும் மதீனாவிலே கற்பனையால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.அவர்களின் கவனத்துக்கு இது வந்தால் அடுத்த கனம் உடனே மாற்றப்படும்.இதனை விமர்சிப்பதில் நாம் டைம் போக்குவது தேவையற்றது.

    ReplyDelete

Powered by Blogger.