Header Ads



யாழ்ப்பாண முஸ்லீம் சம்மேளன கூட்டம் + மீலாத் விழா ஏற்பாடுகள் (படங்கள்)


(பா.சிகான்)

யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இவ்வாண்டுக்கான மீலாதூன் நபி நிகழ்வினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒஸ்மானியாக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற சம்மேளனத்தின் கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.சமூக ஒன்று கூடல் எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களான சியானாஸ் தாஹீர்,எஸ்.ஏ.சி முபீன் ஆகியோர் ஏகமனதாக சபையோரினால் தெரிவு செய்யப்பட்டனர். இதனடிப்படையில் இவ்வொன்று கூடலானது இருவரது மேற்பார்வையில் இடம்பெறவுள்ளது.

...........................................

யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் இவ்வாண்டுக்கான பொதுச்சபை
கூட்டம் கலந்துரையாடல்  சம்மேளனத்தின் தலைவர் கே.எம் நிலாம் தலைமையில் நடைபெற்றது.

ஒஸ்மானியாக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் முதலாவதாக சூறத்துல் பாத்திகாவுடன் நிகழ்வு ஆரம்பமானது. இதனை தொடர்ந்து சம்மேளனத்தின் உபசெயலாளர் அஸ்மீ அய்யூப் ஆன்மீக சொற்பொலிவொன்றை ஆற்றினார். பின்னர் சம்மேளனத் தலைவர் கே.என் நிலாம் உரை இடம்பெற்றது.

கூட்டத்தின் மற்றைய அங்கமாக புதிதாக உருவாக்கப்பட்ட யாப்பு (சட்டக்கோவை)சபையோரது பார்வைக்கு விடப்பட்டது.அதன் பிற்பாடு பொதுச்செயலாளர் யாழவன் நசீரினால் கடந்த கால கூட்டத் தொடரின் அறிக்கை வாசிப்பும்,புதிய சட்டக்கோவை தொடர்பான விளக்கமும் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சமுக நலத் திட்டங்கள் தொடர்பாக சபையில் விவாதிக்கப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது.






1 comment:

  1. மீலாத் விழா ஏற்பாடுகள் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது தவறாகும். "யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல்" நிகழ்விற்கான ஏற்பாடுகளே மேற்கொள்ளப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளவும்.
    அஸ்மின்

    ReplyDelete

Powered by Blogger.