அமைச்சர் மேர்வின் சில்வாதான் கொலைக்கார சூத்திரதாரி..! உடன் கைதுசெய்ய வலியுறுத்து..!!
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஹசித மடவலவின் கொலையுடன் அமைச்சர் மர்வின் சில்வாவிற்கு தொடர்பிருப்பதாக களனி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
களனி பிரதேச சபையில் 08-01-2013 இடம்பெற்ற செய்தி சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அதன் தலைவர் பிரசன்ன ரனவீர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அமைச்சர் மர்வின் சில்வாவின் அடியாட்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அமைச்சர் மர்வின் சில்வாவும் கைது செய்யப்பட வேண்டும் களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரனவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் லங்கா விஜித்தகுமார கருத்து வெளியிடுகையில், காவல்துறையினர் தமது உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இதற்கு முன்னரும் பல தடவைகள் தமது முறைப்பாடுகளை காவல்துறையினர் கவனத்தில் கொண்டு செயற்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித்த மடவல களனியில் வராகொட பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக வைத்து கடந்த சனிக்கிழமை மாலை இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் களனி மற்றும் கிரிபத்கொடை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். (Sfm)
Mirikankalodu karunai ullawar ippadi pannuwaara?
ReplyDelete