பஷர் அல் அசாத் ஆட்சியை காப்பாற்ற எங்களால் முடிந்தவரை உதவுவோம் - ஈரான்
சிரியா உள்நாட்டு போரால் அங்கு 60,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகள், அதிபர் பஷர் அல் ஆசாத் அரசை கலைக்க முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் ஈரான் அதை கண்டித்துள்ளது.
ஈரான் குடியரசு நாட்டில் சுப்ரீம் தலைவராக இஸ்லாமிய மதத்தலைவர் அயதொல்லா அலி கோமேனி விளங்கினார். அவரது உதவியாளரான அலி அக்பர் வெலயாத்தி, "சிரியா மீது நடத்தப்படும் எந்த தாக்குதலும், ஈரானின் மீது நடத்தப்படும் தாக்குதலாக கருதப்படும்" என்று உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முக்கிய ஆதரவாளரான சிரியா அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சியை காப்பாற்ற எங்களால் முடிந்தவரை உதவுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சிரியாவிற்கு எதிராக செயல்பட்டு வரும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அரேபிய நாடுகளுக்கு எதிராகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய ஆதரவு நாடாக சிரியா இருந்து வருகிறது. சிரியாவுக்கு தேவையான அரசியல் மற்றும் ஆயுதத் தளவாடங்களையும் ஈரான் வழங்கி வருகிறது என்றும் வெலயாத்தி கூறியுள்ளார்.
Post a Comment