Header Ads



இலங்கையில் விஸ்வரூபத்தை வெளியிட அனுமதியோம் - அமைச்சர்கள் வாக்குறுதி



கமல்ஹாசன் நடிப்பில்  வெளிவரவிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக இன்று 30ம் தேதி கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பி ஏக்கனாயக்க மற்றும் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரை சந்தித்து திரைப்படத்தில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் விரோதமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதை தெளிவுபடுத்தும் கடிதத்தை சமர்ப்பித்தனர். விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் ஏக்கனாயக்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் ஜமாத் நிர்வாகத்திடம் வாக்குறுதி அளித்தார்கள்.

விஸ்வரூபம் திரைப்படத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக இடம் பெற்றிருக்கும் காட்சிகளை தெளிவு படுத்தும் கடிதத்தை திரைப்பட தனிக்கைக் குழுவின் தலைவர் காமினி குமார சேகரவுக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் வழங்கி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தொடர்பில் விளக்கமளித்தனர். இதே நேரம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்குமாறு தான் ஆவன செய்வேன் என்றும் அவர் ஜமாத் நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.







3 comments:

  1. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். குர்ஆனிய சமூகமாக வாழ யா அல்லாஹ் எங்களுக்கு அருள்புரிவாயளாக. உன்னுடைய உதவி இன்றி எதையுமே சாதிக்க முடியாதவர்களாகவே நாம் இருக்கிறோம் என்பதை நீ அறிந்தவன்.

    ReplyDelete
  2. Muslims will get whatever we want from this Govt. until March 15th Geneva convention is over. We should wait and see whether these promises would hold afterwards. Very soon our puppet ministers would be packed and sent to Muslim countries to gather support.

    ReplyDelete

Powered by Blogger.