இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவர்களுக்கு மாவீரர் விருது
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, கடந்த 1984-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ம் தேதி, அவரது மெய்காப்பாளர்களான சத்வந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர்கள் இருவர் மீதும் குற்றம் சாட்டி நடந்துவந்த இந்திரா காந்தி கொலை வழக்கில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 1989-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 6ம் தேதி, திகார் சிறையில் இவர்கள் தூக்கிலிடப்பட்டனர். தூக்கிலிடப்பட்ட இவர்களின் 24ம் ஆண்டு நினைவு தினம், ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி சார்பில் நேற்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நகரில் கொண்டாடப்பட்டது.
அமிர்தசரஸ் ஷிரோமணி அகாலி தளம் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிம்ரன் ஜித் சிங், தல்கல்சா தலைவர் கன்வர்பால் சிங் உள்ளிட்ட சீக்கிய மதத்தலைவர்கள் பலர் இவ்விழாவில் பங்கேற்றனர். சத்வந்த் சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் கவுரவிக்கும் வகையில், அவருடைய தந்தைக்கு போர் வீரர்கள் அணியும் அங்கியை சீக்கிய மதத்தலைவர் ஜியாணி குர்பச்சன் சிங் வழங்கி, 'மத நம்பிக்கைக்காக மரணத்தை தழுவிய மாவீரன்' பட்டத்தையும் வழங்கினார்.
இந்திரா காந்தி கொலையாளிகள் நினைவாக பிராத்தனையும் செய்யப்பட்டது. தல்கல்சா தலைவர் கன்வர்பால் சிங், நிருபர்களிடம் இந்நிகழ்ச்சி பற்றி கூறுகையில், 'பஞ்சாப் பொற்கோவில் மற்றும் அகாலி தக்த்தின் புனிதத்தன்மையை மதிக்காதவர்களை பழிவாங்குவதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த சத்வந்த் சிங், பியந்த் சிங் ஆகியோரை நினைத்து சீக்கிய சமுதாயம் பெருமைப்படுகின்றது.
அவர்களுடைய வீரத்தையும், தியாகத்தையும் போற்றும் வகையில் இந்த நாளில் சீக்கிய சமுதாயம் அவர்களுக்கு நினைவாஞ்சலி செலுத்திகின்றது' என்றார்.
இது இந்தியாவில் நடந்தது அங்கு ஓரளவு ஜனநாயகம் இன்னும் உள்ளது ....இதுவே நமது நாடான இலங்கையில் நடந்தால் என்ன நடக்கும் !!!!!!!!!! அன்றிரவே ஆள் மாயம் ????????????
ReplyDelete