யாழ். பொம்மைவெளியில் வெள்ளநீர் - மக்கள் பெரும் சிரமம் (படங்கள்)
(பா.சிகான்)
யாழ் மாவட்டத்தில் ஜே 87 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பொம்மை வெளி முஸ்லீம் கிராமத்தின் தேங்கியுள்ள வெள்ள நிலையினை படத்தில் காண்கிறீர்கள்.
அண்மையில் யாழ் மாவட்டத்தில் பெய்த மழையினால் மேற்படி கிராமம் வெள்ள நிலைமையினை எதிர்கொண்டது. இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதுதவிர மழை காலங்களில் அடிக்கடி வெள்ள நீரினால் மூழ்கடிக்கப்படும் கிராமமாக இதன் பெயர் இங்கு பேசப்படுகிறது.இங்கு சுமார்200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராம மக்கள் குறித்து யாழ் மாநகர சபையில் அங்கம் வகிக்கும் 5 முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகள் கவனிப்பதில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தற்போதய வெள்ளநிலையால் பெரம் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளதுடன் டெங்கு நோய் பரவும் அபாயமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment