''ஆத்மாவின் புண்'' கவிதை நூல் வெளியீட்டு விழா
கவிஞரும் எழுத்தாளருமான வைத்திய அத்தியட்சகர் அஸாத் எம் ஹனிபா வின் ''ஆத்மாவின் புண்'' கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 09.29 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தை மறைன் கிறண்ட் வரவேற்புமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ அல்ஹாஜ் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அமீர் இஸ்மாயில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ .எம் . நௌசாத் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை. எல். எஸ் ஹமீட் ஆகியோரும்
விசேட அதிதிகளாக நவமணி பிரதம ஆசிரியரும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான அல்ஹாஜ் என். எம் . அமீன் தினகரன் வார மஞ்சரி பிரதம ஆசிரியர் திரு. ரி. செந்தில் வேலவர் பன்னூலாசிரியர் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிரேஷ்ட அறிவிப்பாளர் அதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம் ஜிப்ரி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் தொழிலதிபர் தேச சக்தி தேச மான்ய டாக்டர் அப்துல் கையூம் ஜே.பி முதல் பிரதியை பெற்றுக் கொள்கிறார்.
நூல் அறிமுகத்தை மு.மு.மு பாசிலும் நூல் ஆய்வினை சட்டத்தரணி மர்சும் மௌலானாவும் வழங்கவுள்ளனர்.
Post a Comment