றிசானாவை இன்று சந்திக்கவிருந்த டாக்டர் கிபாயா இப்திகார்...!
இன்று புதன்கிழமை சகோதரி றிசானாவை சவூதி அரேபியாவில் பணியாற்றும் டாக்டர் கிபாயா இப்திகார் சந்திக்க இருந்துள்ளார்.
றிசானா மீது மரண தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையிலடைக்கப்பட்டிருந்த காலப்பகுதயில் றிசானாவை சிறைக்குச் சென்று டாக்டர் பார்த்துவந்தார்.
இந்நிலையில் இன்று டாக்டர் கிபாயா இப்திகார் சிறைச்சாலைக்கு சென்ற சமயம் அவர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். றிசானா நபீக்கின் குடும்பத்தார் இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றையும் அவர் இன்று றிசானாவிடம் கையளிக்க இருந்துள்ளார்.
சவூதி அரேபியாவிலுள்ள டாக்டர் கிபாயா இப்திகாருடன் எமது இணையம் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே இவ்விடயங்களi அறிந்தகொள்ள கூடியதாக இருந்தது.
மன்னிக்கும் பண்பற்ற,மனச்சாட்சி இல்லாத,கொடூரமானவர்கள்தான் அந்த குழந்தையின் பெற்றோர். காட்டு மிராண்டி தந்தையும் தாயும்.... சீ கேவலம்... யஹூதிகளின் பரம்பரையை சேர்ந்தவர்கள் போலும். முதலில் அந்த Sub - Agent ஐ தூக்கிலிடவேண்டும்.சரியான அரசாக இருந்தால் Saudi Arabia விற்கு பணிப்பெண்கள் அனுப்புவதை தடை செய்ய வேண்டும்.செய்யுமா இந்த அரசு?
ReplyDeleteoru muslima patti yahuthi endu sollum athiharam ongalukku illa antha pedorutaya kavalaya patti ongalukku theriuma
Deleteயாஹ் அல்லாஹ் இந்த சகோதரியின் பாவம்கள் எல்லாவற்றையும் மன்னித்து சுவர்க்கத்தை கொடுத்தருள்வாயாக
ReplyDeleteஆமீன்.
Roshan Ambani
https://www.facebook.com/roshan.ambani
மரண தண்டனைக்காக எதிர்பார்த்திருக்கும் முகம் தெரியாத ஒரு சகோதரிக்காக சீரும் நீங்கள், கொல்லப்பட்ட தங்கள் குழந்தைக்காக நீதி கேட்டு போராடும் ஒரு அன்பான பெற்றோருக்காக சாபமிடுவதில் எந்த நியாயமும் இல்லை. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு விடயத்தில் நீங்கள் எல்லை மீறி போய் "ஷிர்க்" இல் நுழைந்தது விடாதீர்கள்.
ReplyDeleteநாட்டில் உள்ள அதுவும் சரீஆ சட்டம் நிறைவேட்டப்படும் போது அதில் குறை காண விளைவது சரீஆவில் குறை காண்பதாகும். எனவே சட்டத்துக்கெதிரான நமது வார்த்தைகள் கவனம். உங்கள் விமர்சனங்கள் அல்லா குர்ஆன் சட்டத்துக்கு புறம்பானது என்றால் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படலாம் இல்லாவிட்டால் அல்லா குர்ஆனுக்கு எதிரான விமர்சனமாக நீங்கள் அல்லாஹ்வால் தண்டிக்கப்படலாம். மார்க்க சட்டங்களோ அல்லது அரச சட்டங்களோ நிறைவேற்றப்படும் போது அதை அப்படியே அல்லாஹ்வின் பக்கம் விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவருக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வதே நமக்கு போருத்தமமும் தண்டிக்கப்பட்ட ஆத்மாவுக்கும் பொருத்தம். மகழே தெழிவு பெறுங்கள்.
ReplyDeleteசகோதரர் Mubharrakk Thagha அல்லாஹ்விடம் (தௌபா) பாவமன்னிப்பு தேடிக்கொள்ளுங்கள். ஏனெனில் வல்ல ரப்பல் ஆலமீன் தனது திரு மறையில் وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنفَ بِالْأَنفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ ۚ فَمَن تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَّهُ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّـهُ فَأُولَـٰئِكَ هُمُ الظَّالِمُونَ ﴿٤٥﴾ அவர்களுக்கு நாம் அதில், "உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;" எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்;. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (சூரா அல்-மாஇதா:45)
ReplyDeleteإنا لله وإنا إليه راجعون காருண்ய நபி வாழ்ந்த புனித மண்ணிலே இன்னும் கல் நெஞ்சர்களும் காட்டறபிக் கூட்டங்களும் ஈவிரக்கமற்ற ஈனர்களும் அறிவிலிகளும் வாழ்கிறார்கள் என்பதற்கு சகோதரி ரிசானாவின் மரண தண்டனை நல்லதோர் உதாரணம்.
ReplyDeleteமரணம் நிறைய வலி தரும்தான். குழந்தையை இழந்த தாய்க்கு அந்த வலி இருக்கும்தான். இல்லை என்று சொல்லவில்லை.
ReplyDeleteஇங்கே ஷரியா பற்றி வகுப்பெடுக்கும் சகோதரர்களே! ஒன்றைக்கவனியுங்கள். கோபப்பட்டு கருத்துச் சொல்லும் சகோதரர்கள் ஷரியா பற்றி எந்தவொரு பிழையினையும் குறையினையும் சொல்லவில்லை. சொல்லவருவது என்னவென்றால், மன்னிக்கவும் இஸ்லாம் /ஷரியா இடம் தந்திருக்கின்ற போது அதை செய்யாமல் பழிக்குப்பழி என்று இறுதி வரை நின்ற அந்த குடும்பத்தினைரைப்பற்றித்தான்.
7 வருடங்கள் ஒரே பிடியில் நின்று ஒரு ஏழைப் பெண்ணின் உயிரை எடுப்பதில் எதை அந்த தாய் பெற்றுவிட்டார்? ஒன்றுமில்லையே, குழந்தையை இழந்த தாய்க்கு இழப்பின் வலி தெரியும்தான். அதே தாய் ஏன் நம்மால் இன்னொரு தாயும் தன் குழந்தையை இழந்து துயரப்படவேண்டும் என எண்ணவில்லை?
இஸ்லாம் போதிக்கும் காருண்யம் இல்லாத அவர்களைப்பற்றி கொஞ்சம் கடுமையாக விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை என்பதே எனது தனிப்பட்ட அவதானம்.
அதோடு, முதலில் நாம் வகுப்பெடுப்பதை நிறுத்திவிட்டு இப்போதுள்ள இந்த சமூக நிலையை பணிப்பெண்கள் என நாடுகடந்து செல்லும் எமது சகோதரிகளின் அவலத்தை கொஞ்சமாவது நிறுத்த எதையாவது செய்ய முனைவோம்.
There is nothing call "Shariah" in Holy Quran. These laws were made by people who are calling themselves "Ulamas" for their survival. I can prove that to anybody who challenge me.
ReplyDeletemr mubarack! islaamiya saddawaakkatthin uyiroaddatthaikkandu ulakaME MEI SILIRTTHU NIKKUMPOATHU NEE ENNAYYA PUNNAAKKU.
ReplyDeleteநண்பர்களான Saudi Arabia ,Slahy ,Bu Anound குரான் - ஹதீஸ் களை சற்று ஆழமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.....
ReplyDelete"உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும் காயங்களுக்கு (ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும், ஒருவர் (பழி வாங்கு வதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்க வில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!" (05: 45)
எனினும், ஒருவர் (பழி வாங்கு வதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
தனது ஒரே மகனை கொலை செய்த கொலைகாரனை பார்த்து விட்டு உன்னை மன்னித்து விட்டேன் என்று கூறிய அந்த ஏழைத்தாய் வாழும் நாட்டிலா இந்த மனச்சாட்சி இல்லாத,கொடூரமான காட்டு மிராண்டி தந்தையும் தாயும் வாழுகின்றனர்?
மனிதம் இல்லாத அந்த பெற்றோர் சவுதி அராபிய மண்ணின் கேவலம்கள்.ஒன்றும் அறியா அந்த ஏழை குடும்பத்தின் நம்பிக்கையை பறித்தெடுத்தே இறை நம்பிக்கை அற்ற காட்டு மிராண்டிகள்.
யா அல்லாஹ்! நீயே யாவும் அறிந்தவன்,நீயே நீதமாக நீதி செலுத்தக்கூடியவன்.அகில உலகத்தின் நீதிபதியே! மனித தீர்ப்புகளின் பிழைகளை நன்கறிந்தவனே சகோதரி ரிசானாவின் மரணத்திற்கும் மறுமையில் உன்தீர்ப்பை சொல்.
தாயிலும் பார்க்க அன்பு கொண்டவனே ! சகோதரி ரிசானாவின் பாவங்களை பொருந்திக்கொள் நாயனே!
சகோதரி ரிசானாவை அல்லாஹ் மன்னித்து சுவனத்தில் நுழைவிக்க துஆ செய்கிறோம். சகோதரி ரிசானா இந்த குற்றத்தை செய்தாரா அல்லது அவர்மீது திட்டமிட்டு வீண்பழி சுமத்தப்பட்டதா என்பதுபற்றிய முழுமையான அறிவு அல்லாஹ்விடமே உள்ளது.வெளிப்படையான அதுவும் தெளிவான சான்றுகளின் அடிப்படையிலேயே சவுதி நீதிமன்றம் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.இது சவுதியினுடைய சொந்த சட்டமல்ல அல்லாஹ்வின் சட்டம் இதனை தேவையின்றிவிமர்சிக்கும் உரிமை நம்மில் எவருக்கும் இல்லை.இதன் பொருள் நாம் கொலையை ஆதரிப்பதாகாது. ஒரு றிசானாவின் மரணதண்டனைக்காக அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தையே நாம் கொச்சைப்படுத்தமுற்படுவது நம் எதிரிகளின் விமர்சனங்களுக்கு தீனிபோடுவதாகிவிடும். தயவு செய் ரிசானா நமது சகோதரிகளில் அதுவும் நமது இரத்தத்துளிகளில் ஒன்றிதான் அவளுக்கு நடந்தது நமக்க்கும் கவலைதான். ஆனால் றிஸானாவின் மீதள்ள அன்பு அல்லாஹ்வின்மீதும் அவன் சட்டங்களின்மீதுமுள்ள அன்பை அது மிகைத்துவிட்க்கூடாது அல்லாஹ் கூறுவதைக்கேளுங்கள்.وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ அறிவுடையோரே பழிக்குப்பழி வாங்குவதிலே உங்களுக்கு வாழ்வு இருக்கிறது 2 179
ReplyDeleteஜாஹிலிய காலத்தவர் யார் என்றால் இங்கு தாறுமாராக கருத்திடுபவர்கள்தான்., அல்லாஹ்வின் ரசூல்(ஸல்)அவர்கள் ஒரு முறை ஒரு குற்றத்துக்கு தண்டனை வழங்கிய போது ”என் மகள் பாத்திமா களவெடுத்தாலும் பாத்திமாவின் கைகள் வெட்டப்படும்”என்று உறுதியாக பதில் சொன்னார்கள் ஆக இஸ்லாமிய சட்டங்கள் ஏழை,பாலை என்று பார்க்கப்படாது அத்துடன் இங்கு இன்று கொல்லப்பட்டவள் நிரபராதியா,குற்றவாளியா என்பதை அல்லாஹ் நங்கு அறிந்தவன் ஆக முடியுமானவர்கள் ரிஸானாவின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லலாமே!முடியுமான வரை அக்குடும்பத்துக்கு உதவலாமே!
ReplyDeleteஇங்கு இஸ்லாமிய சட்டத்தை யார் இழிவு படுத்தினார்? குற்றத்தின் தன்மை,குற்றம் செய்தவர் வயது,குற்றம் நடந்த விதம்,குறித்த குற்றவாளிக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள தண்டனை (7 வருடங்கள் சிறையில் இருந்தார் ) என்பவற்றை கருத்தில் கொண்டு மன்னிப்பு வழங்காத கல் நெஞ்சம் கொண்ட அந்த பெற்றோர்தான் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.
ReplyDelete"உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும் காயங்களுக்கு (ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம். எனினும், ஒருவர் (பழி வாங்கு வதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்க வில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!" (05: 45)
இந்த குர்-ஆன் வசனத்தில் ........
''ஒருவர் (பழி வாங்கு வதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்''.
ஆகவே ! மன்னிப்பது நாம் செய்த பாவங்களில் இருந்து எங்களை காக்கும்...
தனது ஒரு மகனை கொலை செய்த கொலைகாரனை அல்-குர்ஆனை முழுமையாக மணனம் செய்தால் அவனை மன்னித்து விடுவேன் என்று சொன்ன தந்தை, தனது ஒரே ஒரு மகனை கொலைசெய்த கொலைகாரனை எந்தவித நிபந்தனையுமின்றி மன்னித்து விடுதலை செய்த தாய் இவர்களும் அந்த மண்ணில்தான் வாழ்கின்றனர்.அவர்களும் முஸ்லிம்கள்தான்,அவர்களுக்கும் வேதனை உண்டுதான்.
புரிகின்றதா எனக்கு இஸ்லாம் பற்றி சொல்லித்தரும் அன்புள்ள ஆசிரியர்களே !
என்னது சவுதியின் சட்டம் அல்லாஹ்வின் சட்டமா? மண்ணாங்கட்டி!!! சவுதிக்கி ஷரியா சட்டத்தை நிறைவேற்ற ஏதாவது தகுதி இருக்கிறதா??? ஒட்டு மொத்த சவுதியின் பொருளாதாரமே வட்டியோடு கழந்திருக்கிறது மேலும் அங்கே பல்வேறு நச்சதிர ஹோடெல்களுக்கு மது இறக்குமதி செய்யபடுகிறது இஸ்லாதிட்கு புறம்பான புலப்புகளை வைத்து கொண்டு இஸ்லாமிய ஷஃரிஆவை அரைகுறையாக விளங்கி சுயல நதிட்கு சொந்த நலதிட்கே சவுதியில் இஸ்லாமிய சட்டங்களின் பேரால் அராஜாங்கம் நடக்கிறது
ReplyDeleteஅமேரிக்கன் கொலை செய்தால் சவுதியில் விசாரிக்க முடியாது சவுதி தண்டனை கொடுக்க முடியாது இதுதான் சவுதியில் சரியா சட்டத்தின் இலட்சனம் அமெரிகனை அமெரிகாவிலேயே விசாரிக்க வேண்டி அல்லாஹ் சொன்னானா அவது தூதர்கள் சொன்னார்களா???
ஷரிஅத்தின் பேரால் அராஜாங்கமும் அட்டூழியமும் தாண்டவமாட நாம் வக்காலத்து வாங்குவது இஸ்லாத்தையே இழிவு படுத்துவதாகும் நடந்தது ஒரு கொலை அல்ல அது ஒரு விபத்து மேலும் அதனை கண்ணால் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை ஆக அரை குரை மொழி தெறிந்த மலையாளியின் மொழி பெயர்பை வைத்தே இப்படியான நியாயமான தீர்பு வழங்க பட்டுள்ளது நியாயமான தீர்பாக இருந்தால் இந்நேரம் ஆதாரத்தை சவுதி அரசு பகிறங்க படுத்தி இருக்கும்
சொந்த குழந்தையையே கொன்று புதைத்த மனிதரை மன்னித்து மிக உயர்ந்த அந்தஸ்தை அல்லாஹ்வும் அவனது தூதரும் வழங்கி இருக்கும் இஸ்லாமிய முன்மாதிரிக்கி முன்னே கை தவரி நடந்த ஒரு விபத்திட்காக நியாயமான எந்த நீதி விசாரனையும் இன்றி மொழி அறியா நிலமையை மட்டும் வைத்து அநியாயமாக ஒரு உயிர் பறிக்க பட்டுள்ளது இதட்கு பகரமாக அந்த குடும்பத்தின் நிலையை அல்லாஹ் அத்தாட்சியாக்க போதுமானவன்
கோடான கோடி மக்களால் சபிக்கபடும் அல்லாஹ்வாலும் சபிக்கபட்டு இஸ்லாத்தின் மேல் படிந்துள்ள கரை நீக்கபட வேண்டும் என்பதே அதிகமான மக்களின் விருப்பம்
மூதூரின் குக்கிராமத்தில் பிறந்த ஒரு பெண் மூக்கால் கதைக்கும் மலையாளியின் மொழிபெயர்பினாலும் அக்கரையே இல்லாமல் வழக்கு முடியும் வரை பொடுபோக்காக இருந்த நம் நாட்டின் தூதரக பணியாளர்களாலுமே இவ்வளவு விபரீதம் நடந்துள்ளது என்பதே உண்மை
சகோதரர் Sarhoon Mohamed சொல்வதை நான் முழுமையாக ஆதரிக்கின்றேன். இங்கு கோபத்தோடு அந்தப் பெற்றோரைக் கடிந்துகொண்டவர்கள் யாரும் இஸ்லாத்தையோ அல்லது ஷரீஆவையோ சாடவுமில்லை விமர்சிக்கவுமில்லை. மாறாக அவர்கள் அந்தப் பெற்றோரின் ஈவிரக்கமில்லாக் கல்நெஞ்சம் பற்றித்தான் விமர்சித்திருக்கின்றார்கள். அதிலென்ன தவறிருக்கின்றது? தன் குழந்தையைப் பறிகொடுத்த வேதனையும் பழிவாங்கும் எண்ணமும் மாதக்கணக்கோ அல்லது ஓரிரு வருடமோ தொடர நியாயமிருக்கிறது. அதை விடுத்து ஏழு வருடங்கள் கடந்தும் அதே மனநிலையோடு இருப்பதென்பது அவர்கள் மனிதர்கள்தானா எனச் சிந்திக்கவைக்கிறது. தன் பாசத்துக்குரிய சிறிய தந்தையின் ஈரலைச் சப்பித் துப்பிய ஹிந்தாவையே மன்னித்துவிட்ட கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த மண்ணில்தான் இவர்களும் பிறந்தார்களா என்று வியந்துகொள்கிறது மனது. யா அல்லாஹ் இந்த சகோதரியை உயர்தரமான ஜன்னதுல் பிர்தௌஸில் நுழையச் செய்வாயாக!
ReplyDeleteவிமர்சித்திருக்கின்றார்கள். அதிலென்ன தவறிருக்கின்றது? தன் குழந்தையைப் பறிகொடுத்த வேதனையும் பழிவாங்கும் எண்ணமும் மாதக்கணக்கோ அல்லது ஓரிரு வருடமோ தொடர நியாயமிருக்கிறது. அதை விடுத்து ஏழு வருடங்கள் கடந்தும் அதே மனநிலையோடு இருப்பதென்பது அவர்கள் மனிதர்கள்தானா எனச் சிந்திக்கவைக்கிறது. தன் பாசத்துக்குரிய சிறிய தந்தையின் ஈரலைச் சப்பித் துப்பிய ஹிந்தாவையே மன்னித்துவிட்ட கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த மண்ணில்தான் இவர்களும் பிறந்தார்களா என்று வியந்துகொள்கிறது மனது. யா அல்லாஹ் இந்த சகோதரியை உயர்தரமான ஜன்னதுல் பிர்தௌஸில் நுழையச் செய்வாயாக!
ReplyDeleteஇஸ்லாமிய சட்டத்தை எவரும் குறை கூறவும் இல்லை கூறவும் முடியாது...
ReplyDeleteஏனெனில் அது அல்லாஹ்வின் சட்டம் ஆனால் இஸ்லாமிய சட்டத்தை சரியாக கடைபிடிக்கிறோம் அதன்படியே தண்டனை வழங்குகிறோம்... என்று சொல்லிக்கொண்டு தங்கள் வசதிக்கேற்றவாறு சிலவற்றை கண்டும் காணாமல் இருக்கும் இந்த முட்டாள்களை குறை கூறாமல் இருக்க முடியாது...
கொலைக்குற்றத்துக்கு மரண தண்டனை என்று சொல்லும் அதே இஸ்லாம் தான் ஒரு பெண் ஒரு மஹ்ரமி ஆண் துணை இல்லாமல் தனியாக பயணம் செய்வது விபச்சாரத்துக்கு சமம் என்று சொல்கிறது...
ஆகவே தமது நாடுகளில் எத்தனை ஆயிரக்கணக்கான பெண்கள் தனியாக பிரயாணித்து வந்து அந்நிய ஆண்கள் இருக்கும் ஒரு வீட்டில் வருடக்கணக்கில் (24 மணி நேரமும்) தங்கியிருந்து வேலை செய்கிறார்களே...இதை இவர்கள் இஸ்லாமிய கண் கொண்டு பார்க்காததன் நீதி என்ன..?
கொலைக்குற்றத்தைப்போல பெருங்குற்றமாகிய விபச்சாரத்துக்கு சமமாகக்கருதிய ஒரு குற்றத்தைத்தடுப்பதற்கு இந்த நாடுகளில் உள்ள (முட்டாள்)முஃப்திகளிடம் ஃபத்வா இல்லையா... அந்த (அ)நீதி மன்றங்களிடம் சட்டம் இல்லையா... அந்த அ(சுரர்)ரசர்களிடம் தர்மம் இல்லையா...
அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர்.. அல்லாஹு அக்பர்...
யா அல்லாஹ் எனது சகோதரி றிசானவின் கப்ரை விசாலமாக்கி அதில் சுவர்க்கவாசலை திறந்துவிடுவாயாக...
யா அல்லாஹ் அந்த குற்றதை அவர் செய்திருந்தால் இந்த மரண தண்டனையை அதற்கான பரிகாரமாக்கியும் மேலும் இந்த 7 வருடகாலமும் மனதளவிலும் உடலளவிலும் அனுபவித்த துன்பங்களைக்கொண்டு அவரது ஏனைய பாவங்களையும் மன்னித்தும் அந்த குற்றத்தை செய்யாமல் இருந்திருந்தால் அநியாயமாக கொல்லப்பட்டவருக்கான் ஷஹீதுடைய அந்தஸ்த்தை கொடுத்தும் ஜன்னதுல் ஃபிர்தௌசில் எனது சகோதரியை சேர்த்து விடுவாயாக...
ஆமீன் ஆமீன் ஆமீன்...