வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர் றிசாத் நேரில் சென்று பார்வை (படங்கள்)
(வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா)
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிப்புக்குள்ளான வவுனியா மாவட்ட மக்களை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில் வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று வெள்ளிக்கிழமை சென்று பார்வையிட்டதுடன்,அவர்களது தேவைகளை கேட்டறிந்து கொண்டுமள்ளார்.
கடந்த சில தினங்களாக பெய்த அடை மழையுடன் கூடிய வெள்ளப் பெருக்கு என்பவற்றால் வவுனியா மாவட்டத்தில் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியதுடன்,குளங்களும் பெருக்கெடுத்ததால் பல அனைக்கட்டுகளும் உடைப்பெடுத்திருந்தன.
இதனையடுத்து அமைச்சர் இன்று வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சிற்பிக்குளம்,கந்தசாமி நகர்,தட்டாங்குளம், ஆண்டியாப்புளியங்குளம் அவரந்துளாவ,பாவற்குளம்,கல்குண்ணா மடு உள்ளிட்ட பல கிராமங்களுக்கு விஜயம் செய்து மக்களுடன் கலந்துரையாடியதுடன்,அவர்களுக்கு தொடர்ந்து மேற் கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து பிரதேச செயலாளர்,கிராம அதிகாரி,அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
அமைச்சருடன்,வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் ஷாஹிப் மொஹிதீன்,அமைச்சரின் இணைப்பாளர் முத்து முஹம்மத்,வவுனியா நகர சபை உறுப்பினர் அப்துல் பாரி,வவுனியா தமிழ் பிரதேச சபை உறுப்பினர்,ஜோர்ஜ் உட்பட பலரும் அதன் போது வருகைத்தந்திருந்தனர்.
Post a Comment