Header Ads



இடதுசாரி கட்சிகளின் துணிவு முஸ்லிம் காங்கிரஸுக்கு வருமா..?



பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பைப் புறக்கணிக்கப் போவதாக லங்கா சமசமாசக் கட்சி அறிவித்துள்ளது. 

இந்தத் தகவலை லங்கா சமசமாசக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் வெளியிட்டுள்ளார். 

தலைமை நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது, தாம் சபையில் சமூகமளித்திருப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

லங்கா சமசமாசக் கட்சியின் சார்பில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுடன் சேர்த்து நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அரசில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலரான அமைச்சர் டியு.குணசேகர, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு இடதுசாரி அரசியல் வாதியான வாசுதேவ நாணயக்காரவும் இவர்களுடன் இணையலாமென தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தில் அங்கம் வகித்தபடியே, அமைச்சுப் பதவிகளிலும் இருந்தகொண்டு இடதுசாரி கட்சிகளுக்கு பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேணையை எதிர்த்து வாக்களிப்பதற்கு துணிவு இருப்பது போல முஸ்லிம் காங்கிரஸிற்கும் அந்த துணிவு வருமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது..

7 comments:

  1. அதுசரி ஏன் முஸ்லிம் காங்கிரசை மாத்திரம் சொல்லுகிறீர்கள்? அரசில் உள்ள தேசிய காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன சிறுபான்மை முஸ்லிம் கட்சிகள் இல்லையா? சமூகம் சம்பந்தமான எந்த விடயம் வந்தாலும் முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களையும்தான் முஸ்லிம் சார்பானவர்கள் என்ற ரீதியில் விமர்சிக்கிறார்களே தவிர , அமைச்சர் அதாவுல்லாவையும், அமைச்சர் றிசாத் பதியுத்தீன் அவர்களையும் அவர்கள் சார்ந்த கட்சிகளையும் முஸ்லிம் என ஏன் எல்லோரும் எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்?
    சமூகம் சம்பந்தமான விடயங்கள் வரும்போது அரசுடன் உள்ள, எதிர்க்கட்சியில் உள்ள எல்லா முஸ்லிம் உறுப்பினர்களையும் கேள்விக்கோ, விமர்சனத்திற்கோ உட்படுத்துங்கள் , அப்போதுதான் கட்சி சார்பான குற்றச்சாட்டுகள், தவிர்ப்புகளை விட்டு எல்லோரும் சரியாக இயங்குவார்கள்.
    எது எப்படியோ நீதியற்ற இந்த விடயத்திலும், சமூகத்தைப் பாதிக்கும் திவிநெகும சட்டமூல விடயத்திலும் , அரசிலுள்ள இவ்வமைச்சர்களும் ,அவர்கள் சார்ந்த கட்சிகளும் எவ்வாறு நடக்கப்போகின்றன எனப் பொறுத்திருந்து பார்ப்போம். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும் பார்த்துக்கொண்டிருப்பவனாகவும் இருக்கிறான்.

    ReplyDelete
  2. Intha nadu muslim kalin thalaiwan nan than anru kurum Rauff Haeem thana apaawarathan kupidanum ok
    Iladi SLMC Leader posta Hon Rishad Bathirudeen kuduthu parungal muslim kaduku antha pirachchaium warathu Allah Pathu kapan

    ReplyDelete
  3. எடுத்ததற்கு எல்லாம் நாம் முஸ்லிம் காங்கிரசை பல்வேறு பட்ட கட்சிகளுடனோ அமைப்புக்களுடனோ ஒப்பிட்டு குறைகாண்பது ஏற்றுக்கொள்ளகூடியது அல்ல.

    ReplyDelete
  4. எந்த பதுருதீனுக்கு கொடுத்தாலும் அவ்வளவு தான்.பள்ளிவாசல் பிரச்சினை, முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்தர்களின் ஆர்ப்பாட்டம் இவைகளுக்கு எதிராக நிங்கள் சொல்லும் பட்ருட்டீன் என்ன தான் செஞ்சாங்க...!
    எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..

    ReplyDelete
  5. enna mr.wajith solringa.. Divineguma sattam ella muslimskum etiranathuthan.. Atha hon.rishard etirthu vaakkalippara? Ellorume governmtra bommaihalthan. Afiviruthi arasiyaluku rishard ok but.. Urimai arasiyaluku........?

    ReplyDelete
  6. Ellarum Santharappavaathihal.

    ReplyDelete
  7. Mr M.sabry Ningal sollwathu pilayana vidayam intha Rishad Bathirudeen alathaium saium thiramayana muslim arasiyal wathi muslim kalin urimai,apiviruthi,awargalin pirachchinali padri pasum srilanka muslim kalin thalaiwar iwar

    Mannar -Musali
    wajith BOC

    ReplyDelete

Powered by Blogger.