மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி வெள்ளி விழாவில் வெளிநாட்டு பிரதிநிதிகள்..!
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி தனது வெள்ளி விழாவையும், நான்காவது பட்டமளிப்பு விழாவையும் 14-01-2013 + 15-01-2013 வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அதன் அதிபர் உஸ்தாத் எம்.யு.எம்.ரம்ஸி தெரிவிக்கின்றார்.
மேற்படி கல்லூரியின் பிரதான இரு நிகழ்வுகளில் முதல் நிகழ்வான கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழா காலை 10.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை மேற்படி கல்லூரியின் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்போது 115 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளதாகவும் , இரண்டாவது நிகழ்வான கல்லூரியின் வெள்ளி விழா நிகழ்வு மாலை 6.45 மணிமுதல் கொழும்பு-03 இல் அமைந்துள்ள மேமன் மண்டபத்தில் இடம்பெறவிருக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மேற்கு ஆபிரிக்காவின் சர்வதேச கூட்டுறவு அமைச்சர் டட்டோ பேராசிரியர் டொக்டர் சனோ கௌடப் முஸ்தபாவும், கௌரவ அதிதியாக சூடான் பல்கலைக்கழக பேராசிரியரும், அரபு இலக்கண பணிப்பாளருமான டொக்டர் அப்துல் றஹீம் அலி மற்றும் பல பிரமுகர்களும், புத்திஜீவிகளும், மார்க்க அறிஞர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்கிழ்வின்போது கல்லூரியின் புதிய இலட்சினை அறிமுகம் செய்தல், உத்தியோக பூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைத்தல், வெள்ளிவிழா நினைவு மலர் வெளியிடல், இஸ்லாஹிய்யா வெளியீட்டு மையத்தின் 10 நூல்கள் வெளியிட்டு வைக்கும் நிகழ்வுகள் என்பன இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment