இலங்கைக்கு சேதம் ஏற்படுத்தாத சமூகம் முஸ்லிம்கள் மாத்திரமே - எஸ். எச். இஸ்மாயீல்
(இக்பால் அலி)
இந்நாட்டில் சிங்கள இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்து நாட்டின் சொத்துக்களைச் சேதப்படுத்துகின்றனர். தமிழ் இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தின் பெயரில் தேசத்திற்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர். முஸ்லிம்கள் இந்த தேசத்திற்கு எதிராக எதையும் செய்ததில்லை என 'உண்மை உதயம்' இஸ்லாமிய மாத இதழின் ஆசிரியர் அஷ்ஷெஹ் எஸ். எச். இஸ்மாயீல் தெரிவித்தார்.
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா மற்றும் பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல் இணைந்து நடத்திய சன்மார்க்கச் சொற்பொழிவு 25-01-2012 அன்று பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவரும் மற்றும் பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் பரிபாலனசபைத் தலைவருமான அஷ்ஷெஹ் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக நல்லினக்கத்துக்கு இஸ்லாம் கூறும் வழிகள் எனும் தலைப்பில் உறையாற்றும் போதே க் எஸ். எச். இஸ்மாயீல இவ்வாறு இதனை தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந் பேசுகையில்
இந்நாட்டில் சிங்கள இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்து நாட்டின் சொத்துக்களைச் சேதப்படுத்துகின்றனர். தமிழ் இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தின் பெயரில் தேசத்திற்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர். முஸ்லிம்கள் இந்த தேசத்திற்கு எதிராக எதையும் செய்ததில்லை.
இலங்கை முஸ்லிம்கள் தமது தேச பக்தியை நடைமுறையில் அடுத்த சமூகமும் உணரும் வண்ணம் வெளிப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம். முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தான் இலக்கை-கிரிக்கட் விளையாட்டு நடைபெறும் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.
மாற்று மக்களுடன் முஸ்லிம்கள் ஒற்றுமையாகவும், சுமூகமாகவுமே வாழ விரும்புகின்றனர். இந்த நல்ல நிலையைச் சீர்குழைக்க தேசவிரோதக் கும்பல்கள் சதி செய்து வருகின்றனர். ஒரு சிறு குழுவினரே பெரும்பான்மை இன மக்களின் பெரும்பாலானவர்கள் இந்த தீய சக்திகளை ஆதரிக்கவில்லை. நாம் நமது பண்பாடுகள் மூலமாக அந்த நல்ல மக்களும் தீய சக்திகளுக்குத் துணை போகாது காக்க வேண்டியுள்ளது.
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நபி(ஸல்) அவர்கள் விட்டுக் கொடுத்து சண்டையைத் தவிர்த்தது போல் உலக விவகாரங்களில் விட்டுக் கொடுத்து சமாதானத்தை நிலைநாட்ட வேண்டும்.
ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது நாம் உம்ராவுக்கு வந்துள்ளோம், சண்டை செய்ய வரவில்லையென எதிரிகளுக்கு நபி(ஸல்) அவர்கள் தமது நிலை பற்றித் தெளிவு படுத்தினார்கள். இந்த அடிப்படையில் ஹலால் விவகாரதம் தொடக்கம் இஸ்லாம் முஸ்லிம்கள் அவர்களுக்கு இருக்கும் தப்பெண்ணங்களைக் களையும் கடமையும் நமக்குள்ளது.
அன்பளிப்புக்கள், ஸகாத்தில் ஒரு பகுதி என நபி(ஸல்) அவர்கள் எதிரிகளின் மனதைக் கவர எடுத்த முயற்சிகள் குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
நபி(ஸல்) அவர்கள் சுமையா(ரழி) அவர்களின் குடும்பத்திற்குக் கூறியது போல் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. தொழுகையின் மூலமும், பொறுமையின் மூலமும் அல்லாஹ்விடம் உதவி தேடலாம். இஸ்லாமிய பண்பாடுகள், பழக்க வழக்கங்கள் மூலமும் அவர்களின் மனதைக் கவருவோம். இருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்தி மாற்று இன் மக்களில் உள்ள நல்லவர்கள் மூலம் எமக்கு சாதகமான பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விஸ்வரூபம் திரைப்படத்தைத் தற்காலிகமாகத் தடை செய்த இலங்கை அரசுக்கு இம்மாநாட்டினூடாக எனமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
இந்நிகழ்வில் குத்பாப் பேருரையை அஷ்ஷெஹ் பீ. வீ. ஜாபீர் தியாகமின்றி சுவனமில்லை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அஷ்ஷெஹ் எம். ஐ. முபாரக் மதனி இன்றைய தேவை ஒழுக்கமும் கட்டுப்பாடுமே என்ற தலைப்பிலும் அஷ்ஷெஹ் ல்ஹாபீழ் ஏ. எம். மஃரூப் பரக்கத் நிறைந்த வாழ்க்கை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர். நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையிலும் இம்மாநாட்டில் மக்கள் பல பகுதிகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment