Header Ads



பாபரி மஸ்ஜித்திற்கு பதிலாக தாஜ்மகாலை இடித்திருக்க வேண்டும்..!


""பாபர் மசூதிக்கு பதிலாக, தாஜ் மகாலை இடிக்க முன்வந்திருந்தால், வன்முறை கும்பலுக்கு நான் தலைமை வகித்து அழைத்து சென்றிருப்பேன்,'' என, உத்தர பிரதேச அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான, அசம் கான் கூறினார்.

உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் அரசில், நகர்புற அபிவிருத்தி துறை அமைச்சராக இருப்பவர் அசம் கான். கட்சி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கு நெருக்கமானவர்.மாநிலத்தில் முந்தைய பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது, முதல்வர் மாயாவதி, தன் கட்சி நிறுவனர் கன்ஷி ராமுக்கும், தனக்கும் பிரமாண்ட சிலைகளை நிறுவி, அரசு பணத்தை வீணடித்தார் என்ற, எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகினார்.

இந்நிலையில், மாநில அமைச்சர் அசம் கான், முசாபர்நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:பாபர் மசூதியை இடித்த கும்பல், பாபர் மசூதிக்கு பதிலாக, தாஜ் மகாலை இடிக்க முன் வந்திருந்தால், அந்த கும்பலுக்கு நான் தலைமையேற்று அழைத்து சென்றிருப்பேன்.ஏனெனில், அரசு பணத்தை எடுத்து, தன் மனைவிக்கு நினைவு சின்னம் எழுப்ப, மன்னர் ஷாஜகானுக்கு யார் அதிகாரம் அளித்தது?இவ்வாறு, அவர் கூறினார்.

1 comment:

  1. அதெல்லாம் சரி மச்சி... உலகம் முழுக்கவுமிருந்து அதைப் பார்க்க வருவோரால் நாட்டுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பதையும் தாஜ்மஹாலைச் சுற்றி எத்தனை குடும்பங்கள் வயிறு கழுவுகின்றன என்பதையும் மறந்து போனியே மச்சி... இப்பிடித்தான் அரசியலுக்கு வர்ரவங்களில் அனேகம் பேருக்கு மூளை பின்னுக்கு இறங்கிடுது...

    ReplyDelete

Powered by Blogger.