நிந்தவூர் அல் மதீனா வித்தியாலய உயர்தர பரீட்சை முடிவுகள்
(சுலைமான் றாபி )
கல்முனை கல்வி வலயதிற்கு உட்பட்ட நிந்தவூர் அல் மதீனா மஹா வித்யாலயம் நடைபெற்று முடிந்த 2012 (A/L) பரீட்சையில் அதிக பெறுபேறுகளைப் பெற்று நிந்தவூரில் சாதனை படைத்துள்ளது . கடந்த 2012ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட உயர்தர வகுப்பு , தற்போது 2வது தடவயாகவும் மாணவர்களை உயர்தரப்பரீட்சையில் சித்தியடைய வைத்துள்ளது . இங்கு இரண்டாவது தடவையாக உயர்தர வர்த்தகப் பிரிவில் 15 மாணவர்கள் கல்வி பயின்று இதில் சுமார் 08 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்பினை பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் அல் ஹாஜ் S அஹ்மத் அவர்கள் தெரித்தார்.
மேலும் இம்முறை வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் வர்த்தகப் பிரிவில் அம்பாறை மாவட்ட முதலாவது நிலையினையும் தனது பாடசாலை பெற்றுள்ளதாக தெரித்தார் . இங்கு கல்வி பயின்ற 05 மாணவர்கள் 03 A சித்திகளையும் ,02 மாணவர்கள் 02A, 01B சித்திகளையும் , 01 மாணவர் 01A, 02B சித்திகளையும் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளனர் .
மேலும் இப்பாடசாலைக்கு போதிய பௌதீக வளங்கள் குறைவாக இருந்தாலும் இம்மாணவர்களுக்கு வணிகக் கல்விப் பாடத்தினை J.அப்துல் றஊப் ஆசிரியர் அவர்களும் , பொருளியல் பாடத்தினை பகுதி தலைவர் MH றாபி ஆசிரியர் அவர்களும் , கணக்கீடு பாடத்தினை திருமதி MT பெனசிர் அவர்களும் போதித்ததாக அதிபர் அல் ஹாஜ் S. அஹ்மத் அவர்கள் யாழ் இணையத்தளத்திடம் தெரிவித்தார் .
Post a Comment