ஆளும்கட்சி உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல தடை - ஜனாதிபதி மஹிந்த உத்தரவு
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்துவரும் வாரங்களில் வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாடுகளில் தங்கியுள்ள ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக கொழும்பு திரும்புமாறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
திவிநெகும சட்டமூலம் வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திவிநெகும சட்டமூலத்தின் இரண்டு பகுதிகளை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலமே நிறைவேற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment