மதுபான கடையை உடனடியாக அகற்று - தெல்தோட்டை முஸ்லிம்கள் அவசர கோரிக்கை
(ஹனீபா மொஹமட்)
கண்டி தெல்தோட்டை பிரதேசம் மூவின மக்களும் செறிந்து வாழும் பிரதேசம் ஆகும். ஏற்கனவே மதுபான கடைகள் பிரதேசத்தை அண்மித்து இருக்கையில் தற்போது மேலும் ஒரு மதுபான கடை திறக்கப்பட்டுள்ளது.
இது தெல்தோட்டை பிரதேச சபைக்கு அன்மைலும், பஸ் நிலையத்திற்கு அருகிலும், மார்க்கெட்டுக்கு பக்கத்திலும் அமைந்துள்ளது.
இப்பிரதேசத்தில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் பாடசாலைகள் அமைந்துள்ளதாலும், கல்வி கற்கும் மாணவ மாணவிகள் காலை முதல் மாலை வரை இப்பிரதேசத்திற்கு சென்று வருதாலும் இங்கு மதுபாண கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது கவலைக்குரிய விடயமென பிரதேச முஸ்லிம்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் குடும்பப் பெண்கள் . குமரிப்பெண்கள் . பாடசாலை மாணவிகள், சிறு பிள்ளைகள் இவ்வழியே செல்லும்போது குடிகாரர்கள் சாரத்தை தூக்கிக் கொண்டு சிறுநீர் கழிப்பதும், தூசன வார்த்தைகளால் கத்துவதும் பிரதேச மக்களால் சகிக்க முடியாத நிலையில் உள்ளது.
ஆகையால் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊடகங்கள், பத்திரிகைகள், நலன்விரும்பிகள் காவலதிகாரிகள் அனைவரிடமும் இந்த மதுபான கடையை அப்புறப்படுத்தி தாருங்கள் என தெல்தோட்டை முஸ்லிம்கள் சார்பில் அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதெல்லாம் இந்த பொது பல சேனாவுக்கு தெரிவதில்லையே...!
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteதவறு இருந்தால் மன்னியுங்கள் சகோதரர் ms-brotaer's
ReplyDeleteஉங்கள் சுட்டிக்காட்டலுக்கு நன்றி .
இம்மதுபான கடைகள் தானே நாட்டின் வருமானத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது.
பொது பல சேனாவின் சேவை எங்களுக்கு தேவை .