பங்களாதேஷ் உள்ளூராட்சி நிறுவன தலைவர்கள் இலங்கை வருகை (படங்கள்)
(ஜே.எம். வஸீர் + அஸ்ரப் ஏ. சமத்)
பங்களாதேஷ் உள்ளூராட்சி அமைச்சின் தலைமையில் 19 உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்களைக் கொண்ட பிரமுகர்கள் இலங்கையில் காணப்படும் உள்ளூரட்சி முறைமை பற்றிக் கற்றுக் கொள்வதற்காக இலங்கை வந்துள்ளனர்.
இவர்களுக்கான இருநாள் செயலமர்வு உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தில் இன்று 15-01-2013 காலை அதன் பணிப்பாளர் ஐ..ஏ. ஹமீட்
தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க கலந்து சிறப்பித்ததுடன், பல உயர் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பிரமுகர்கள் நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு விஜயம் செய்து உள்ளூராட்சி நிறுவனங்களை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment