பிள்ளைகள் வழிதவற பெற்றோர்தான் காரணம் - சாடுகிறார் அமைச்சர்
(Tn) கைத்தொலைபேசிகள் இன்டர்நெட் பாவனைகள் என பிள்ளைகள் வழி தவறுவதற்குத் தேவையானவற்றை வகுத்துக் கொடுப்பதில் பெற்றோரே முன்நிற்கின்றனர் என சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிரான தேசிய தின நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
சிறுவர்களுக்குத் தேவையானதை வழங்காது தேவையற்றதை பெற்றோர்கள் பெற்றுக்கொடுப்பதே தவறான வழிக்கு அவர்கள் செல்ல வழிவகுக்கிறது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு அன்பின் நிமித்தம் அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கின்றனர். அவர்களுக்கு அவை பொருத்தமானதா, அத்தியாவசியமானதா என்பதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. அவர்களின் தேவைகளையும் பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். குறிப்பாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அவர்களுக்கு விருப்பமான ஒரு நிகழ்ச்சியை பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு பார்த்து ரசிக்கின்றனர்.
அந்த நிகழ்ச்சி பிள்ளைகளுக்குப் பொருத்தமானதா என்பது பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. கைத்தொலைபேசிகள் இன்டர்நெட் பாவனைகள் என பிள்ளைகள் வழி தவறுவதற்குத் தேவையானவற்றை வகுத்துக் கொடுப்பதில் பெற்றோரே முன்நிற்கின்றனர். பிள்ளைகளை மேலதிக டியூசன் வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோர் அவர்கள் டியூசனுக்குப் போகின்றார்களா மற்றும் அவர்களின் செயற்பாடுகள் பற்றி கவனத்திற் கொள்வதில்லை. இத்தகைய செயல்களே 60 வீதமான பிள்ளைகள் சீரழியக் காரணமாகிறது.
Post a Comment