''பன்றி இறைச்சியிலும் ஹலால் என இருந்தது'' கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு
(அஷ்ரப் ஏ. சமத்)
இலங்கையில் சுப்பர் மார்க்கட்டில் உள்ள பன்றி இறைச்சியைக் கொண்ட கொள்களனிலும் 'ஹலால்' எனக் குறிப்பிட்டிருந்தது. இப்பாரதூரமான நிலையின் காரணமாக ஹலால் என்பது முஸ்லீம் மக்களின் அன்றாட வாழ்வுக்கு ஹலால் எனக் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து உணவு குடிபாண வகைகள் தொடர்பான கடுமையானதும் நியாயமானதுமான நம்பிக்கையீனமொன்று உருவாகி முஸ்லீம் நுகர்வோருக்கு குழப்பமாகியது. இச் சிக்கலை நிவர்ததி செய்வதற்கு 3ஆம் தரப்பினரின் சம்பந்தம் தேவை என்பதை புரிந்துகொண்ட சில நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு இனங்க, நீண்ட ஆலோசனைகள் கலந்துரையாடல்களின் பின் எமது சபை இப்பணியை செய்வதற்கு தீர்மாணித்தது ஹலால் கமிட்டியின் செயலாளர் மௌலவி தெரிவித்தார்.
ஹலால் சான்றிதழ் சம்பந்தமாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஹலால் கமிட்டியும், முன்னாள் அமைச்சர் எம்.எச்.முஹம்மத் ஜனாதிபதியின் பௌத்த மத விவகார ஆலோசகர் பலகம ரம்ம ரன்சி தேரர், மற்றும் ஹசன் மொளலானா ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் தஹ்லான் ஹலால் கமிட்டியின் செயலாளர் முர்சித் மௌலவி மற்றும் தாசீம் மௌலவி ஆகியோறும் அடங்கிய ஊடகவியலாளர் மாநாடு இன்று(15) மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது.
தாசீம் மௌலவி
இந்த நாட்டில் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை கட்டாயம் இலங்கையில் இருக்க வேண்டும் என அமைச்சர் பசில் ராஜபக்ச எங்களிடம் தெரிவித்துள்ளார் என தாசீம் மௌலவி தெரவித்தார்.
இந்த நாட்டுக்கு சுற்றுப்பிரயாணிகளாக வரும் அராபியர்கள் முஸ்லீம்கள் ஹலாலான முறைமையிலான உணவு மற்றும் உற்பத்திகளையே தேடுகின்றனர். மேலும் முஸ்லீம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உற்பத்திகளுக்கு ஹலால் சான்றிதழ் இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியாது ஆகவே இந்த ஹாலால் முறை கட்டாயம் இலங்கையில் இருக்க வேண்டுமென அமைச்சர் பசில் ராசபக்சவை சந்தித்தபோது அவர் எங்களிடம் தெரிவித்த கருத்து என தாசீம் மொளலவி தெரிவித்தார்.
ஹலால் சான்றிதழ் விநியோகிக்கும் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு முன் ஹலால் பற்றிய நிலை இலங்கையில் மிகவும் தெளிவற்றதாக இருந்தது. ஆதன்போது அதற்காக எந்தவொரு முஸ்லீம் அமைப்புக்களும் செயற்படவில்லை சில உணவுத் தயாரிப்பாளர்கள் தமது உற்பத்திகளை முஸ்லீம் நுகர்வோர் கொள்வனவு செய்வதற்கு தயங்குவதை கன்னுற்ற பொழுதிலும் இது விடயத்தில் அவர்களுக்கு வழிகாட்டல் இன்மையினால் அவர்கள் தமது உற்பத்திகளில் அறபு அல்லது ஆங்கில எழுத்தில் ஹலால் என அச்சிட்டு விநியோக்கலாயினர். அது போன்று உணவு சிற்றுண்டிச் சாலைகளும் தாங்கள் ஹலால் நிறுவணம் எனக் கூறிகொண்டனர். ஒரு சுப்பர் மார்க்கட்டில் விறப்னைக்கு பொருட்களை விற்பனை செய்தனர் இதனால் முஸ்லீம் மக்கள் குழம்பிப்போயினர்.
பொருலொன்றுக்கு வழங்கப்படும் ஹலால் சான்றிதழ் முலம் நிறுவனங்களுக்கு ஏற்படும் செலவு 10 சதத்தை விட குறைந்த தொகையாகும். சுல நிறுவனங்களுக்கு இத் தொகை ஒரு சத்தினை விட குறைநதாகும். ஆகவே ஹலால் சான்றுக்கும் பொருளின் விலையைத் தீர்மாணிப்பதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை என்பது மிகவும் தெளிவானது. ஒருவர் இச்ச்hன்றிதழின் பெயரால் பொருளின் விலையை அநியாயமாக அதிகரிக்கச் செய்வாரென்றால் அச் செயலுக்கு பொறுப்பு கூற வேண்டியது அந் நிறுவனம் அல்லாமல் ஹாலால் சான்று அல்ல என முர்சித் மௌலவி தெரிவித்தார்.
What is the purpose of this meting???
ReplyDeleteWhat he said (Mr. Pasil rajapaksa ) about. "Pothu plasena "!!!!!