சுவீடனில் புகையிரதத்தை கடத்திச்சென்ற பெண்..!
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ரெயில் பணிமனை உள்ளது. இங்கு வேலை செய்த துப்புரவு பெண் பணியாளர் இன்று காலியாக நின்றிருந்த பயணிகள் ரெயிலை புறநகர் பகுதிக்கு திடீரென ஓட்டிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், அந்த பெண்ணுக்கு சரியாக ரெயிலை ஓட்டத் தெரியாததால் சுமார் ஒரு மைல் தூரம் சென்றதும் தடம் புரண்டது. பின்னர் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோதி நின்றது. ரெயிலை கடத்திச் சென்ற பெண் பலத்த காயம் அடைந்து ஸ்டாக்ஹோம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் 3 குடும்பத்தினர் இருந்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ரெயிலை ஓட்டிச் சென்ற பெண்ணை கைது செய்தனர். மேலும் அவரிடம் ரெயில் என்ஜின் சாவி எப்படி கிடைத்தது? ஏன் ரெயிலை கடத்திச் சென்றார்? என்பது பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Post a Comment