Header Ads



வீதிக்கு றிசானா நபீக் என பெயர் சூட்டப்படவுள்ளதாம்..!


மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் பெரியபாலம் சந்தியில் இருந்து ஷாஃபி நகர் வரையான பாதைக்கு ரிஸானா நபீக் என பெயரிடப்படவுள்ளதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிடுகின்றார்.
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த பாதை அபிவிருத்தி செய்யப்பட்டு அதற்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் பெயரை சூட்டவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூதூர் ஹாஃபி நகர் பகுதியில் அமைந்துள்ள ரிசானாவின் வீட்டிற்கு மாலை சென்றிருந்த அமைச்சர் அவரின் வீட்டை நிர்மாணிப்பதற்கு நிதியுதவி வழங்கினார்.
தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதுடன் வீட்டை நிர்மாணித்தல் மற்றும் சகோதரர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காகவே ரிசானா வெளிநாட்டிற்கு சென்றிருந்தார் என இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் பங்களிப்புடனும் இதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். sfm

3 comments:

  1. இறந்தவர்களுக்காக துதி பாடுவதையும்,சிலைகள் வைப்பதையும் விட்டுவிட்டு உயிரோடு இருக்கும் பாதிப்புக்குள்ளாயிருக்கும் ஆயிரம் இளம் பெண்கள் விடயத்தில் ஆக்கபுர்வமான நடவடிக்கை எடுப்பது சாலச்சிறந்ததாகும்.அத்துடன் இந்த அரசியல்(கள்ளனுகளை)ஓரம் கட்டுவது இன்றைய சூலலில் மக்களின் முக்கியமானதொரு கடமை.

    ReplyDelete
  2. அல் ஹாஸ் துதிபாடுவதட்கும் சிலை வைப்பதட்கும் வீதிக்கி பெயர்வைப்பதட்கும் வித்தியாசம் தெறியாமல் உளருகிறீறா அல்லது அந்த பெண்ணின் பெயர் வைக்கபடுவதை ஜீரனிக்காமல் புலம்புகிறீறா???
    அந்த பெண் கண்டிப்பாக நினைவு கூறபட வேண்டியவல் அப்போதுதான் அவள் நினைவு கூறபடும் காலமெல்லாம் அவளுக்கு பின்னால் உள்ள அந்த சரித்திரத்தை சமூகமும் நாடும் திரும்ப திரும்ப மீட்டவும் அந்தமீட்டலால் அப்படியான நிலைமைகள் உருவாகாமல் உழைக்க வேண்டிய உறுதி எடுக்கவும் செயல்படவும் காரணமாக அமையும்

    அந்த வீதியில் செல்கையில் அந்த வீதியின் பெயரை அறிந்துகொள்ளும் யாவருக்கும் அதன் பின்னால் உள்ள சரித்திரம் அறிய கிடைக்கும் அதன் மூலம் ஏழைகளின் சோகங்களும் ஏழைகளுக்கு உதவ வேண்டிய மனிதாபினான உணர்வுகளும் பீரிட்டு பாய வழி பிறக்கும் அதனால் இது வழிபட அல்ல வழி சமைக்க வழிபாட்டிட்கும் வழி சபைத்தலுக்கும் வித்தியாசம் தெறியாமல் உளரி அதனை ஊடகத்திலும் காறி உமிழவேண்டாம் என தாள்மையாக வேண்டுகிறேன்

    ReplyDelete
  3. Hi Friends,

    எத்தனை கோடிகளைக் கொட்டினாலும் போன உயிரும் புண்பட்ட நெஞ்சமும் மீளப்போவதில்லை என்ற யதார்த்தம் ஒருபுறமிருக்க, ரிசானாவின் பெயர் வீதிக்கு வைக்கப்படுவதை நாம் அனைவரும் மிகவும் வரவேற்க வேண்டும். அந்த ஏழைச்சிறுமியின் பெயர்ப்பலகையைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு முஸ்லீம் மகனும் "சஹாபாக்களின் புகழ்பாடும்" மதத்தலைவர்களும் மக்களின் வறுமையை உதாசீனம் செய்யும் அரசியல்வாதிகளும் வசதிபடைத்தவர்களும் அந்தப் பெண்ணின் அவலத்திற்கு தானும் ஒருவிதத்திலே காரணம்தானே என்ற குற்றவுணர்வால் உள்ளுக்குள் புழுங்க வேண்டும். அதற்காகவாவது ரிசானாவின் பெயர்ப்பலகை கொட்டை எழுத்துக்களிலே பொறிக்கப்பட வேண்டும். அது மங்கிவிடாது புதிதாய்ப் பேணப்படவும் வேண்டும்!

    ReplyDelete

Powered by Blogger.