Header Ads



முஸ்லிம்களும், பேஸ்புக்கும்..!



அஸ்ஸலாமு அலைக்கும் சகோதர சகோதரிகளே..!

இஸ்லாம் என்பது ஒவ்வொருவராலும் இவ்வுலகில் எத்திவைக்கப்பட வேண்டிய கட்டாய கடமையாகும் . நவீன உலகில் face book போன்ற ஊடகங்கள் அல்லா SWT அருளிய மிகப்பெரிய அருட்கொடையாகும். இதனை சிறந்த முறையில் அல்குரான் அல்ஹதீஸ் அடிப்படையிலேயே பயன்படுத்த வேண்டும். இவ்வுலகில் எத்தனை இயக்கங்கள் எத்தனை கருத்துக்களை கூறினாலும் அதைப்பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. அவர்களின் கருத்துக்கள் அல்குரான் அல்ஹதீஸ் அடிப்படையில் இருந்தால் நாம் அவற்றை கேட்டு புரிந்து நடப்பது நம் கட்டாய கடமையாகும். அது மற்றுமன்றி இதனை மற்றவர்களுக்கு பகிர்வதின் மூலம் அலாஹ் SWT இன் மிஹப்பெரிய அருட்கொடையையும் நன்மையையும் இம்மையிலும் மறுமையிலும் பெற்றுக்கொள்வோம்.

ஒரு சில மனிதர்கள் பள்ளிகளில் மட்டும் பயான் கேட்பது இஸ்லாம் என்று நினைக்கிறார்கள். Face book ஐ வெறும் கேளிக்கைகளுக்காக மட்டும் பயன்படுத்துகிறார்கள் .மனிதன் செய்கின்ற ஒவ்வொரு செயல்களுக்கும் மறுமையில் இறைவனுக்கு பதில் அளித்தே ஆகவேண்டும். மாற்று சமூகத்தினருக்கு அல்குரானிலும் அல்ஹதீஸிலும் உள்ள சிறந்த விடயங்களை அழகிய முறையில் face book ஐப்பயன்படுத்தி எடுத்துரைக்க முடியும். இதன் மூலம் அவர்களின் இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்களை தெளிவுபடுத்த முடியும். இது இக்காலத்தில் இறைவன் நமக்கு அருளிய பெரும் பாக்கியமாகும். ஆனால் சிலர் face book இல் சினிமாவையும், பிறந்த நாள் வாழ்த்துக்களையும், கேளிக்கூதுக்களையும், அனாவசிய ஆபாசப்படங்களையும் இன்னும் மற்ற மனிதர்களின் தனிப்பட்ட விடயங்களை பகிர்ந்து அவர்களின் மனதை புண்படுத்துவதட்கும் பயன்படுத்துகின்றனர். 

இன்னும் சிலர் மாற்று மதத்தினரை இழிவு படுத்துவதற்கும் சமூகங்களிட்கிடையே குழப்பங்களை ஏற்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். இது போன்ற விடயங்கள் இஸ்லாத்தில் மிகப்பெரிய பாவமாகும். நாம் உலகில் எந்த மூலையில் எந்தப்பகுதியில் இருந்தாலும், அது இஸ்லாமிய அல்லது இஸ்லாம் அல்லாத நாடாக இருந்தாலும் நாம் அல்குரான் அல்ஹதீஸ் கூறிய வழியில் வாழ்வது நம் கட்டாய கடமையாகும்.

எனவே இந்த face book ஐ இஸ்லாமிய தக்வா களமாக பயன்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவானாக ! ஆமீன் ! 

உங்கள் சகோதரன் 
Faiz   

1 comment:

  1. Every Muslim should know the Dawah techniques,
    Islah is different from Dawah.
    Moulavis should emphasize about important of Dawah in every sermons often. beforehand We should know the proper Islam.. Shame honest!!!

    ReplyDelete

Powered by Blogger.